சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

Added : செப் 25, 2021
Share
Advertisement
கடலுார்-மன வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பளித்தது.கடலுார் பகுதியைச் சேர்ந்தவர் 8ம் வகுப்பு படித்து வந்த மன வளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமி. இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். 2019 ஜூன் 17ம் தேதி சிறுமியின் தாய், மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார்.சிறுமியும்,

கடலுார்-மன வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பளித்தது.கடலுார் பகுதியைச் சேர்ந்தவர் 8ம் வகுப்பு படித்து வந்த மன வளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமி. இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். 2019 ஜூன் 17ம் தேதி சிறுமியின் தாய், மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார்.சிறுமியும், அவரது அக்காவும் வீட்டில் இருந்தனர். சிறுமியின் அக்கா வெளியில் சென்று வீடு திரும்பினார். அப்போது, முன்பக்க கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது, நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான சிவானந்தம் மகன் விமல்ராஜ் (எ) சப்பையன், 25; என்பவர் பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது.நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்வேன் என சிறுமிக்கு விமல்ராஜ் கொலை மிரட்டல் விடுத்தார். பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து விமல்ராஜை கைது செய்து கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி எழிலரசி, இவ்வழக்கில் தொடர்புடையை விமல்ராஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 4,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் அரசு மூலமாக பெற்றுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X