ரூ.2.15 கோடி மோசடி வழக்கு:| Dinamalar

ரூ.2.15 கோடி மோசடி வழக்கு:

Added : செப் 25, 2021
Share
புதுச்சேரி-பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ரூ. 2.15 கோடி மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம், வி.எம்.கார்டன், மாணிக்கம் செட்டியார் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வேலையன், 44; கண்டமங்கலம், நவமால் மருதுாரில் இயங்கிய குவாண்டம் புராபிட் குரூப் என்ற நிதி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக

புதுச்சேரி-பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ரூ. 2.15 கோடி மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம், வி.எம்.கார்டன், மாணிக்கம் செட்டியார் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வேலையன், 44; கண்டமங்கலம், நவமால் மருதுாரில் இயங்கிய குவாண்டம் புராபிட் குரூப் என்ற நிதி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார்.புதுச்சேரியைச் சேர்ந்த அண்ணாதுரை, இளவரசன், சிவராந்தகம் ஏழுமலை, பூங்குன்றம் ஆகியோர் நிர்வாகிகளாக பணியாற்றினர். இந்நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், ஒரே வருடத்தில் ரூ. 2 லட்சமாக இருட்டிப்பு செய்து தருவதாக கூறினர். இதை நம்பி, புதுச்சேரி குருமாம்பேட் முதல் தெருவைச் சேர்ந்த ஜெயபால், 50; என்பவர் ரூ. 1 லட்சத்தை 2019 ஜூலையில் முதலீடு செய்தார். மாதம் ரூ. 7 ஆயிரம் வீதம், ஜெயபால் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதை நம்பி தன் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் மற்றும் கம்பெனியில் உடன் பணியாற்றும் ஊழியர்கள் 60க்கும் மேற்பட்டோரை ஜெயபால் நிதி நிறுவனத்தில் சேர்த்து விட்டுள்ளார். அதன்பின்பு, ஜெயபால் ரூ. 18 லட்சம் பணம் மீண்டும் முதலீடு செய்தார். ஆனால், 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு நிதி நிறுவனம் பணம் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்க சென்றபோது, வேலையன் மாயமானார். பூங்குன்றம், அண்ணாதுரை, ஏழுமலை, இளவரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ஜெயபால் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரி, தமிழக பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரிடம் இந்நிறுவனம் ரூ. 2.15 கோடி வரை வசூல் செய்து, ஏமாற்றியது தெரியவந்தது.நிதி நிறுவனத்தின் நிர்வாகி ரசூல், வேலையன், பூங்குன்றம், ஏழுமலை, அண்ணாதுரை, இளவரசன் ஆகியேர் மீது கடந்த 5ம் தேதி சி.பி.சி.ஐ.டி., போலீசார் மோசடி வழக்கு பதிந்து தேடினர்.குருமாம்பேட்டில் பதுங்கி இருந்த நிதி நிறுவன நிர்வாக அதிகாரி வேலையனை, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் நியூட்டன் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தார். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X