பொது செய்தி

தமிழ்நாடு

கிராம வார்டு உறுப்பினர் பதவி ஏலம்? சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-சிறுவத்துார் ஊராட்சியில், வார்டு உறுப்பினர் பதவியை ஏலம் விட ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவத்துார் ஊராட்சியில் 9 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. இதில், 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், நேற்று காலை 9:00 மணியளவில் ஊர்முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அதே

கள்ளக்குறிச்சி-சிறுவத்துார் ஊராட்சியில், வார்டு உறுப்பினர் பதவியை ஏலம் விட ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவத்துார் ஊராட்சியில் 9 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. இதில், 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், நேற்று காலை 9:00 மணியளவில் ஊர்முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூடினர். அங்கு, பதவியை ஏலம் விடுவதற்கான பேச்சு வார்த்தை நடத்தினர்.இதற்கு அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு நடந்த பேச்சு வார்த்தையை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதையறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் உடனடியாக கலைந்து சென்றனர்.தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை நடத்தினர். ஏலம் குறித்த பேச்சுவார்த்தை வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X