சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பல்வேறு வழக்குகளில் 11 பேர் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
கடலுார் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டத்தில் எஸ்.பி.,சக்தி கணேசன் உத்தரவின்படி 7 உட்கோட்டங்களைச் சேர்ந்த போலீசார் நேற்று முன் தினம் இரவு முதல், நேற்று காலை வரை 'ஸ்ட்ரோமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினர்.சரித்திர

கடலுார் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டத்தில் எஸ்.பி.,சக்தி கணேசன் உத்தரவின்படி 7 உட்கோட்டங்களைச் சேர்ந்த போலீசார் நேற்று முன் தினம் இரவு முதல், நேற்று காலை வரை 'ஸ்ட்ரோமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினர்.சரித்திர பதிவேடு ரவுடிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் தொடர்புடைய 778 குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். ரவுடிகள் வீடுகளில் உள்ளார்களா; இல்லையெனில் தற்போது எங்கு உள்ளனர்; என்ன வேலை செய்கின்றனர்; குடும்ப உறுப்பினர்கள் விவரம்; நண்பர்களின் விவரம் சேகரிக்கப்பட்டன.பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஆயுதங்கள் வைத்திருந்த 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட 27 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில்எஸ்.பி., ஸ்ரீநாதாஉத்தரவின் பேரில் ரவுடி கோப்புகளை போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்களின் 135 வீடுகளில் ஆய்வு செய்தனர். இதில் மூன்று பேர் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்எஸ்.பி., ஜியாவுல்ஹக்உத்தரவின் பேரில் 19 ரவுடிகளின் வீடுகளை ஆய்வு செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X