பண்ருட்டி அருகே 10 ம் நுாற்றாண்டு சோழர் கால விஷ்ணு சிலை கண்டெடுப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி அருகே 10 ம் நுாற்றாண்டு சோழர் கால விஷ்ணு சிலை கண்டெடுப்பு

Added : செப் 25, 2021
Share
பண்ருட்டி-பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடியில் 10 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு ஆய்வு மாணவர் குமரகுரு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரசன்னவெங்கடேசபெருமாள் கோவிலின் சுற்றுமதில்

பண்ருட்டி-பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடியில் 10 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு ஆய்வு மாணவர் குமரகுரு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரசன்னவெங்கடேசபெருமாள் கோவிலின் சுற்றுமதில் சுவரின் வெளிப்புறத்தில் கால்கள் இரண்டும், மண்ணில் புதைந்த நிலையில் 5 அடி உயர விஷ்ணு சிலையை கண்டு பிடித்தனர்.அந்த சிலை குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது :இந்த விஷ்ணு சிலை 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்தை சேர்ந்தது. நின்ற நிலையில் உள்ள சிலையில் நான்கு கைகளில், வலதுபுற இரு கைகள் உடைந்துள்ளன. மூக்கின் பகுதி சிறிது உடைந்து, தலையில் மணிமுடி அணிந்துள்ளார். காதுகள் இரண்டிலும் காதணியாக மகர குண்டலம், கழுத்தில் வனமாலை, வைஜெயந்தி என்ற இரு மாலைகள் உள்ளன.இடது கைகள் இரண்டில் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையை இடுப்பில் வைத்தவாறு கம்பீரமாக தோற்றத்தில் உள்ளார். மார்பு பகுதி பூனுல் மற்றும் இடுப்பு நுால் அணிந்துள்ளார். இடுப்பு நுால் என்பது பூநுாலிலிருந்து தனித்து நேரே உடலை ஒட்டி இடுப்பு வரை தொங்கும். இடுப்பு நுால் விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோர் சிற்பங்களில் காணலாம். இடுப்பின் மேல் உதரபந்தம் என்ற அலங்கார அணிகலன், முன்புறத்தின் நடுவே சிங்கமுகம் உள்ளது. இடுப்பு பகுதியில் ஆடையாக கீழ்பட்டாடையும் அணிந்துள்ளார்.இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X