பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமை தேவை: அமைச்சர் நமச்சிவாயம் 'அட்வைஸ்'

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலில் என்.ஆர்.காங். , - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் அதிக வெற்றி பெற்றிட ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என, அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலில் என்.ஆர்.காங். , - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் அதிக வெற்றி பெற்றிட ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என, அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, ராஜ்ய சபா வேட்பாளர் செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், மாநில பொதுச் செயலர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'உள்ளாட்சி தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றிட அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். பா.ஜ., தற்போது புதுச்சேரியில் அசூர வளர்ச்சி பெற்றுள்ளது.வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ., மிகப்பெரிய வெற்றி அடையும். அனைத்து நிர்வாகிகளும் தேர்தலில் நிற்க உரிமை உண்டு. அதே சமயம் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மனவருத்தமின்றி வாய்ப்பு கிடைத்த வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என்றார்.மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலை போன்று, உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற நம் நிர்வாகிகள் கடுமையாக பாடுபடவேண்டும்' என்றார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X