பொது செய்தி

இந்தியா

ஆயுஷ்மான் உட்கிருஷ்ட புரஸ்கார் விருது புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய புதுச்சேரி மாநிலத்திற்கு ஆயுஷ்மான் உட்கிருஷ்ட புரஸ்கார் விருதினை மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா வழங்கினார்.இந்திய அரசு, தேசிய சுகாதார ஆணையம், ஆரோக்கிய மன்தான் 3.0 சார்பாக நேற்று முன்தினம் ஆயுஷ்மான் பாரத் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை சிறப்பாக செயலாற்றிய

புதுச்சேரி-ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய புதுச்சேரி மாநிலத்திற்கு ஆயுஷ்மான் உட்கிருஷ்ட புரஸ்கார் விருதினை மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா வழங்கினார்.இந்திய அரசு, தேசிய சுகாதார ஆணையம், ஆரோக்கிய மன்தான் 3.0 சார்பாக நேற்று முன்தினம் ஆயுஷ்மான் பாரத் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை சிறப்பாக செயலாற்றிய மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பல பிரிவுகளில் ஆயுஷ்மான் உட்கிருஷ்ட புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.கடந்தாண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆயுஷ்மான் பாரத் அட்டை வீதம் 51 சதவீத குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை சிறப்பாக செயலாற்றிய புதுச்சேரி மாநிலத்திற்கு விருது வழங்கப்பட்டது.இணையத்தின் மூலம் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநிலங்களின் சுகாதாரம் மற்றும் நலவழித் துறை அமைச்சர் பாரதி பவார், நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் பால், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், டாக்டர்கள் சர்மா, விபுல் அகர்வால் முன்னிலையில், மத்திய சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருணிடம் ஆயுஷ்மான் உட்கிருஷ்ட புரஸ்கார் விருதினை வழங்கினார்.நேற்று வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 84 சதவீத குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதுச்சேரி மாநிலம் பதிவு செய்துள்ளது.இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சுகாதாரத்துறை செயலர் அருண், மாநில ஒருங் கிணைப்பாளர் டாக்டர் அனந்தலட்சுமி தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X