பொது செய்தி

இந்தியா

நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் மெரிட் லிஸ்ட் வெளியீடு

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட்டை சென்டாக் நேற்று வெளியிடப்பட்டது. பி.டெக்., தரவரிசை பட்டியலில் மாகி எக்ஸல் பப்ளிக் பள்ளி மாணவி ஜோதிகா முதலிடம் பெற்றார்.சென்டாக் நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு 10,684 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.பி.டெக்., பி.எஸ்.சி., தோட்டக்கலை, கால்நடை

புதுச்சேரி-நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட்டை சென்டாக் நேற்று வெளியிடப்பட்டது. பி.டெக்., தரவரிசை பட்டியலில் மாகி எக்ஸல் பப்ளிக் பள்ளி மாணவி ஜோதிகா முதலிடம் பெற்றார்.சென்டாக் நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு 10,684 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.பி.டெக்., பி.எஸ்.சி., தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்.சி., நர்சிங், பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ.எல்.எல்.பி., டிப்ளமோ, கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய தரவரிசை நிலையை www.centacpuducherry.in என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு 10,684 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தாலும், அதில் 9442 மாணவர்கள் மட்டுமே விரும்பிய பாடபிரிவுகளை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்துள்ளனர்.இதேபோல், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள 9,203 மாணவர்களில் 7,979 மாணவர்கள் மட்டுமே தங்களுடைய பாடபிரிவுகளை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்துள்ளனர்.இதுவரை முன்னுரிமை பாடபிரிவுகளை தேர்வு செய்யாதவர்கள், முன்னுரி மையை உடனடியாக செய்ய வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது. தரவரிசை பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களுடைய லாகின் வழியாக தெரிவிக்கலாம்.பி.டெக்., படிப்பிற்கு 4,252 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலில் எக்ஸல் பப்ளிக் பள்ளி மாணவி ஜோதிகா 99.667 ஒட்டுமொத்த மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X