பொது செய்தி

இந்தியா

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை

Added : செப் 25, 2021
Share
Advertisement
பாகூர்-பாகூர் கொம்யூனில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என, சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார்.புதுச்சேரி சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பாகூரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் தடை

பாகூர்-பாகூர் கொம்யூனில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என, சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார்.புதுச்சேரி சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பாகூரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் தடை நடவடிக்கை குறித்து விளக்கினர்.பின், சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் கூறுகையில் 'பாகூர் கொம்யூனுக்குட்பட்ட பகுதியில் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வருகிறது.தடையை மீறினால், மின் இணைப்பு துண்டிப்பு, வணிக உரிமம் ரத்து, அபராதம் வசூலிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில், துணி பை, காகித பை, பாக்கு மட்டை தட்டு, மந்தாரை இலை உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வழங்கிட, விற்பனை நிலையம் அமைக்கப்பட உள்ளது.சுற்றுச்சூழல் துறையின் நடவடிக்கைக்கு வியாபாரி களும், பொது மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.ஆய்வின் போது, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் புனிதவதி, வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம், கிராம நிர்வாக அதிகாரி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X