பொது செய்தி

இந்தியா

பெரு நிறுவன திவால் தீர்மானம் செயல்முறை குறித்த பயிற்சி முகாம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி, நகர திட்ட குழுமம் சார்பில், 'பெரு நிறுவன நிர்வாகம் மற்றும் பெரு நிறுவன திவால் தீர்மானம் செயல்முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.புதுச்சேரி அரசின் கட்டுமான பணிகளை ஒப்பந்தங்களை பெரு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. அரசு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், ஒப்பந்தத்தை ஏற்ற பின் திவால் நோட்டீஸ் வழங்கினால், அதனால் ஏற்படும்

புதுச்சேரி-புதுச்சேரி, நகர திட்ட குழுமம் சார்பில், 'பெரு நிறுவன நிர்வாகம் மற்றும் பெரு நிறுவன திவால் தீர்மானம் செயல்முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.புதுச்சேரி அரசின் கட்டுமான பணிகளை ஒப்பந்தங்களை பெரு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. அரசு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், ஒப்பந்தத்தை ஏற்ற பின் திவால் நோட்டீஸ் வழங்கினால், அதனால் ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பது குறித்து அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் நடந்தது.புதுச்சேரி பெருநகர திட்டக்குழுமம் சார்பில் நடந்த இந்த பயிற்சி முகாமை, அரசு செயலர் மகேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி, அரசு நிறுவனங்கள் பெரும் ஒப்பந்தங்களை, வழங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய வழிமுறைகள், ஒப்பந்தம் மேற்கொள்ளும் பெரு நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் வழங்கினால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.கூட்டத்தில், புதுச்சேரி நகர திட்டக்குழும தலைமை நகர அமைப்பாளர் மகாலிங்கம், முதுநிலை நகர அமைப்பாளர் ஸ்ரீதரன், நகர அமைப்பாளர்கள் கந்தர்செல்வன், விஜயநேரு, உறுப்பினர் செயலர் புவனேஸ்வரன், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், இந்து அறநிலைத்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X