பொது செய்தி

இந்தியா

கருத்தரங்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மற்றும் இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் சார்பில், 'மன ஆரோக்கியத்திற்கான பாலின சமத்துவம்' குறித்த கருத்தரங்கு நடந்தது.என்.எஸ்.எஸ்., தினத்தை முன்னிட்டு, நடந்த கருத்தரங்கில் துணை பேராசிரியர் நித்யா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார் வாழ்த்திப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஹிலாரியா பிரீத்தி, நேர்மறையான

புதுச்சேரி-பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மற்றும் இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் சார்பில், 'மன ஆரோக்கியத்திற்கான பாலின சமத்துவம்' குறித்த கருத்தரங்கு நடந்தது.என்.எஸ்.எஸ்., தினத்தை முன்னிட்டு, நடந்த கருத்தரங்கில் துணை பேராசிரியர் நித்யா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார் வாழ்த்திப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஹிலாரியா பிரீத்தி, நேர்மறையான மனநலம் குறித்தும், இளையோரின் வாழ்கையில் அதன் தாக்கம் குறித்தும் பேசினார். இளையோர் உதவி எண்ணை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா பாலின சமத்துவம் குறித்தும், கொரோனா காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் 'பெண்கள் தலைமையில் பெண்கள்' இணையவழி தற்காப்பு பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மைய இணை இயக்குநர் ராசையா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X