பொது செய்தி

இந்தியா

மியாட் மருத்துவமனை இருதயவியல் சிகிச்சை நிபுணர் இன்று புதுச்சேரி வருகை

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் ஆலோசனை வழங்க, புதுச்சேரிக்கு இன்று வருகை தருகிறார்.சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல் மற்றும் மின் இயற்பியல் துறை இயக்குனர் ஜெய்சங்கர், புதுச்சேரிக்கு இன்று (25ம் தேதி) வருகை தந்து, மாலை 5 மணி முதல், இரவு 9 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.இந்த ஆலோசனை முகாம், எண்: 30/11, அம்பாள் நகர்

புதுச்சேரி-சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் ஆலோசனை வழங்க, புதுச்சேரிக்கு இன்று வருகை தருகிறார்.சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல் மற்றும் மின் இயற்பியல் துறை இயக்குனர் ஜெய்சங்கர், புதுச்சேரிக்கு இன்று (25ம் தேதி) வருகை தந்து, மாலை 5 மணி முதல், இரவு 9 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.இந்த ஆலோசனை முகாம், எண்: 30/11, அம்பாள் நகர் மெயின்ரோடு குண்டுப்பாளையம் பேட்ரிக் பள்ளி அருகில், ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் உள்ள தி பாஷ் மருத்துவமனையில் நடக்கிறது.முகாமில் மார்பு வலி அல்லது அசவுரியம், வியர்த்தல், சோர்வு, உணர்வின்மை, தலைச்சுற்றல், கை, கால், தாடைகளில் அதிகரிக்கும் வலி, கால்களில் வீக்கம், படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம், இதய நோய், திடீர் இதய நோய் மரணங்கள் ஏற்பட்ட குடும்ப வரலாறு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் ஸ்டெண்டிங், பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், இதய வால்பு பழுது மற்றும் மாற்றம் செய்து கொண்டவர்களும், இரண்டாவது கருத்து அல்லது வழக்கமான இதய சோதனைக்கும் முகாமில் பங்கேற்கலாம்.முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வரவேண்டும். முகாமிற்கு வர முன்பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம் - 200 ரூபாய். முன்பதிவுக்கு 78240-60011, 98412-68500 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X