பொது செய்தி

இந்தியா

ஓய்வு பெற்ற ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஓய்வு பெற்ற பாசிக் ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பாசிக் அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.புதுச்சேரி, பூரணாங்குப்பம் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மகாராஜன், 61; பாசிக் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2019 ஆகஸ்ட்டில் பணி ஓய்வு பெற்றார். தனக்கு சேர வேண்டிய பணிக்கொடை பலன்களை பெற, பாசிக் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி புகழேந்தியை சந்தித்து கேட்டார். ஆனால்

புதுச்சேரி-ஓய்வு பெற்ற பாசிக் ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பாசிக் அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.புதுச்சேரி, பூரணாங்குப்பம் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மகாராஜன், 61; பாசிக் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2019 ஆகஸ்ட்டில் பணி ஓய்வு பெற்றார். தனக்கு சேர வேண்டிய பணிக்கொடை பலன்களை பெற, பாசிக் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி புகழேந்தியை சந்தித்து கேட்டார். ஆனால் பணிக்கொடை பணம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கவர்னரிடம் மகாராஜன் புகார் மனு அளித்தார். கவர்னரின் நடவடிக்கையின் பேரில், மகாராஜனுக்கு பணிக்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, மகாராஜன் தனது மகனை அழைத்து கொண்டு பாசிக் நிறுவனத்திற்கு சென்று, மக்கள் தொடர்பு அதிகாரி புகழேந்தியை சந்தித்து, தனக்கு பின்னால் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி கொடை கொடுத்து என்னை மட்டும் ஏன் அலைக்கழிக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த புகழேந்தி, மகாராஜனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணி கொடை வழங்க வேண்டும் என்றால் ரூ. 1 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். காயமடைந்த மகாராஜன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மகாராஜன் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதியவில்லை. இதனால் மகாராஜன், புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கோரிமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, பாசிக் அதிகாரி புகழேந்தி மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X