பொது செய்தி

இந்தியா

போக்ஸ்வேகன் புதிய கார்

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் கே.யு.என்.,போக்ஸ்வேகன் நிறுவனத்தில் புதிய ரக கார் டைகுன் அறிமுக விழா நேற்று நடந்தது.புதுச்சேரி மனாடெக் சேர்மன் மனநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைகுன் காரை அறிமுகப்படுத்தி வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.விற்பனை மேலாளர் சதீஷ்குமார், சர்வீஸ் மேலாளர் பழனிச்சாமி, கே.யு.என்., கேபிடல் நிறுவனத்தின்

புதுச்சேரி-அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் கே.யு.என்.,போக்ஸ்வேகன் நிறுவனத்தில் புதிய ரக கார் டைகுன் அறிமுக விழா நேற்று நடந்தது.புதுச்சேரி மனாடெக் சேர்மன் மனநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைகுன் காரை அறிமுகப்படுத்தி வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.விற்பனை மேலாளர் சதீஷ்குமார், சர்வீஸ் மேலாளர் பழனிச்சாமி, கே.யு.என்., கேபிடல் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த கார் 1.0 லிட்டர் அல்லது 1.5 லிட்டர் இன்ஜின் வடிவங்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 எச்.பி., பவரையும், 175 என்.எம்., டார்க் திறனையும் உருவாக்க கூடியது.அதே நேரத்தில், 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 எச்.பி., பவரையும், 250 என்.எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுமட்டுமில்லாமல், இ.எஸ்.பி.,டி.சி.எஸ்., மல்டி கொலிசன் பிரேக்கிங், சன்ரூப், வையர்லெஸ் சார்ஜ், 10 இன்ச் டச் ஸ்கிரீன் வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காரின் அறிமுக விலை 10.49 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X