பொது செய்தி

இந்தியா

இந்திய திரைப்பட விழா துவங்கியது

Added : செப் 25, 2021
Share
Advertisement
'தேன்' சினிமாவிற்கு விருதுபுதுச்சேரி-புதுச்சேரியில் துவங்கிய இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட 'தேன்' படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அரசு சார்பில், இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட விழா, புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நேற்று துவங்கியது. அலையன்ஸ்

'தேன்' சினிமாவிற்கு விருது

புதுச்சேரி-புதுச்சேரியில் துவங்கிய இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட 'தேன்' படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அரசு சார்பில், இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட விழா, புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நேற்று துவங்கியது. அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் சதீஷ் நல்லாம் வரவேற்றார். நவதர்ஷன் திரைப்படக்கழகம் செயலர் பழனி வாழ்த்தி பேசினார். புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார், கடந்த 2020-ல் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட 'தேன்' படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கினார்.உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விழாவில் முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. விழாவில் தேன் படத்தில் நடித்த நடிகர் தருண், தயாரிப்பாளர் அம்பலவாணன், ஒளிப்பதிவாளர் சுகுமார் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வினயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவுக்கு பின்னர் 'தேன்' திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் விழாவில், தினமும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இன்று 25 ம்தேதி வங்காளத் திரைப்படம் ப்ரம்ம ஜனேன் கோபோன் கொம்மோட்டி திரையிடப்படுகிறது.60 விருதுகள் தேன் திரைப்பட இயக்குனர் கணேஷ் விநாயகன் பேசுகையில், 'இந்த படத்தின் கதைக்கு 2 ஆண்டுகள் உழைத்தோம். இப்படம் ஒடிசா மற்றும் தேனி மாவட்டத்தில் மலைக்கிராம மக்களின் வாழ்வியலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டது.இந்தியாவின் மிகச்சிறந்த விருதான பனோராமா விருதும் எங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டு, அந்த விருதும் கிடைத்தது. இதுவரை 60 விருதுகளை இப்படம் வாங்கியுள்ளது. எளிய மக்களின் வலி, கண்ணீர், துயரங்களை துடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படத்தினை எடுத்தோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X