வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள், அமலுக்கு வந்துள்ளதால், போராட்டங்களுக்கு தடை உள்ளது. எனவே, இன்று 25ம் தேதி மாலை, அண்ணா சிலை அருகே நடத்தப்பட இருந்த, கருப்புக்கொடி போராட்டம் ரத்து செய்யப் படுகிறது.இருப்பினும் வீட்டு வாசலில்,

புதுச்சேரி-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள், அமலுக்கு வந்துள்ளதால், போராட்டங்களுக்கு தடை உள்ளது. எனவே, இன்று 25ம் தேதி மாலை, அண்ணா சிலை அருகே நடத்தப்பட இருந்த, கருப்புக்கொடி போராட்டம் ரத்து செய்யப் படுகிறது.இருப்பினும் வீட்டு வாசலில், இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை கருப்புக் கொடி ஏற்றி காங்., தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்த வேண்டும்.வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைப்பதோடு, வீடுகளின் வாசலில், கருப்பு உடைகள் அணிந்து கொண்டு, கருப்புக்கொடிகள் ஏந்தி, இடைவெளி விட்டு நின்று, புகைப்படங்கள் எடுத்து, அவற்றைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றி, மத்திய அரசுக்கான எதிர்ப்பை மக்களிடம் பரப்ப வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X