பொது செய்தி

தமிழ்நாடு

சாதனைகளை நோக்கி சிவகாசி சகோதரர்கள் இண்டியன், இன்டர்நேஷனல் ரெக்கார்டிலும் இடம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
விருதுநகர் சிவகாசி கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரணியம், கலைசெல்வி தம்பதியின் மகன்கள் அருண், ஸ்ரீகாந்த். இருவரும் பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு குறித்து 11 நாட்களில் கன்னியாகுமரி முதல் மும்பை வரை 2000 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு இண்டியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளனர்.அருண் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி
 சாதனைகளை நோக்கி சிவகாசி சகோதரர்கள்    இண்டியன், இன்டர்நேஷனல் ரெக்கார்டிலும் இடம்


விருதுநகர் சிவகாசி கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரணியம், கலைசெல்வி தம்பதியின் மகன்கள் அருண், ஸ்ரீகாந்த். இருவரும் பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு குறித்து 11 நாட்களில் கன்னியாகுமரி முதல் மும்பை வரை 2000 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு இண்டியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளனர்.

அருண் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகிறார். ஸ்ரீகாந்த் பி.டெக்.,பாலிமர் டெக்னாலஜி படித்து கொண்டிருக்கிறார். 2019ல் தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக்கிற்கு தடை செய்தது. அப்போதே பிளாஸ்ட்டிக் மறு சுழற்சி குறித்து மக்களுக்கு சைக்கிளிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர்.இதற்காக 6 மாத காலம் பயிற்சி எடுத்துள்ளனர்.

சைக்கிள் ரிப்பேர் செய்வது, தற்காப்பு கலை போன்ற பலவற்றை கற்றிருக்கின்றனர். சாதாரண சைக்கிளில் கிளம்ப திட்டமிட்டவர்களுக்கு சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் அருணுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்பிலான பயர் பாக்ஸ் சைக்கிளும், ஸ்ரீகாந்துக்கு ரூ.32 ஆயிரம் மதிப்பிலான மாண்ட்ரா சைக்கிளும் ஸ்பான்சர் செய்துள்ளனர்.கன்னியாகுமரி முதல் மும்பை வரை பயணம் செய்யும்போது பெட்ரோல் பங்க், டோல்கேட்களில் தங்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சேலம் சென்ற போது முன்னாள் முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி உள்ளார். ஒரு நாள் மட்டும் பயணம் மழையால் தடைபட்ட நிலையில், திட்டமிட்டபடி 11 நாட்களில் பயணத்தை முடித்தாக வேண்டும் என்பதற்காக இரவிலும் சைக்கிள் ஓட்டி உள்ளனர். திருடர்கள் உட்பட பலவித தடங்கல்களை தாண்டி இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து இண்டியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளனர்.கொரோனா ஊரடங்கில் வீட்டில் பூச்செடிகளும், மரங்களும் நட்ட இவர்கள் மரம் வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்க, தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் 5 ஆயிரம் மரங்கள் நட்டுள்ளனர்.

இதற்கான செலவிற்கு சிவகாசி லவ்லி கார்ட்ஸ் ஸ்பான்சர் செய்துள்ளனர். மீதம் செலவை தங்கள் பணத்திலே செய்துள்ளனர். தினமும் 8 மணி நேரம் வீதம் 48 மணி நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளனர். இதற்கா கலெக்டர் உட்பட பலரிடம் பாராட்டும் பெற்றுள்ளனர். இதோடு இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பிடித்துள்ளனர். தற்போது நட்ட மரங்களை பராமரிப்பதை அடுத்த திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X