பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு தோட்டம் உருவாக்கும் மாணவர்கள் வேளாண் அறிவியல் நிலைய ஊக்கத்தால் அதீத ஆர்வம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மரங்கள் வளர்ப்பதிலும், வீட்டில் தோட்டங்கள் அமைப்பதிலும் மக்கள் இன்றைக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.வீடுகள், பொது இடங்கள், அலுவலகங்கள், நீர்நிலைகள் என சமூக ஆர்வலர்களுடன் மக்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுகின்றனர்.தற்போது வீட்டு தோட்டம் அமைப்பது 'பேஷன்'ஆக உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பில் மக்கள் வீட்டில் முடங்கி கிடந்த நேரத்தில்
 வீட்டு தோட்டம் உருவாக்கும் மாணவர்கள்  வேளாண் அறிவியல் நிலைய ஊக்கத்தால் அதீத ஆர்வம்



அருப்புக்கோட்டை : மரங்கள் வளர்ப்பதிலும், வீட்டில் தோட்டங்கள் அமைப்பதிலும் மக்கள் இன்றைக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வீடுகள், பொது இடங்கள், அலுவலகங்கள், நீர்நிலைகள் என சமூக ஆர்வலர்களுடன் மக்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுகின்றனர்.தற்போது வீட்டு தோட்டம் அமைப்பது 'பேஷன்'ஆக உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பில் மக்கள் வீட்டில் முடங்கி கிடந்த நேரத்தில் அனைவருக்கும்வீட்டிற்குள்லேயே தோட்டம் அமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளி வளாகத்தில் கொரோனா கால கட்டத்தில் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க துவங்கி,இன்று மாமரம், சீத்தா,வாழை,நெல்லி, கொய்யா என பலன்தரும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அத்துடன் இல்லாமல் மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வளர்ப்பதின் அவசியம், வீட்டு தோட்டம் வளர்த்தல், பள்ளியில் ஒவ்வொரு மாணவனும் கட்டாயமாக ஒருமரம் வளர்த்து பராமரித்தல் என இயற்கை விழிப்புணர்வை ஏற்படுத்தனர்.

அதன்பயனாக இப்பள்ளி மாணவர்களும் மரக்கன்றுகள் வளர்ப்பு, வீடுகளில் தோட்டம் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.இவர்களுக்கு அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வீட்டு தோட்டம் பற்றிய 'டிப்ஸ்' வழங்கி அதற்கான விதை பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.பொது இடங்களில் மரங்கள்கபிலன், 10 ம்வகுப்பு மாணவன்: பள்ளியில் எங்களுக்கு மரகன்றுகள் வளர்ப்பதின் அவசியம் , வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து ஊக்கப்படுத்துகின்றனர். நான் வீட்டில் சிறிய அளவில் வீட்டு தோட்டம் அமைத்துள்ளேன். அதில் வெண்டை, கத்தரி, தக்காளி காய்கறி பயிர்களை பயிரிட்டுள்ளேன். பள்ளியில் அரச மரம் நட்டு பராமரித்து வருகிறோம்.பொது இடங்களிலும் மரங்களை வளர்க்க உறுதி எடுத்துள்ளோம்.இயற்கையை பாதுகாப்போம்சம்யுக்தா, பிளஸ் 2 மாணவி: லாக் டவுன் நேரத்தில் வீட்டில் தோட்டம் அமைக்கலாம் எனயோசனை வந்தது. பள்ளியிலும் அதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

ஓமவல்லி, துளசி, துாதுவளை, கற்பூரவல்லி,வெற்றிலை, மல்லி உட்பட மூலிகை செடிகளை வளர்த்து வருகிறேன்.கொரோனா நேரத்தில் இதுபோன்ற மூலிகை செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பயன்படும். இதன் மூலம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.களம் இறங்கிட்டாங்கஐஸ்வர்யாதேவி, முதல்வர், எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் பள்ளி: ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளியில் பலவிதமான பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு தினமும் பராமரித்து வருகின்றனர்.

மூலிகைசெடிகளையும் வளர்த்து வருகிறோம்.ஆசிரியர்களும், மாணவர்களும் தாமாக முன்வந்து இயற்கையை காப்போம் என் உறுதியுடன் மரங்களையும்,செடிகளையும் வளர்க்க களம் இறங்கி உள்ளனர்.அசத்தும் பள்ளி மாணவர்கள்ராஜாபாபு, உதவி பேராசிரியர், வேளாண் அறிவியல் நிலையம்: பள்ளி மாணவர்களிடம் மரக்கன்று நடுதல், வீட்டுதோட்டம் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இப்கோவுடன் இணைந்து வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதின் நோக்கம், அவசியம் ஆகியவற்றை மாணவர்களுக்கு விளக்கி காய்கறி விதைகளை வழங்கி உள்ளோம். பள்ளியிலும் மாணவர்களே மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது பாராட்டுகுரியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X