பொது செய்தி

தமிழ்நாடு

புயல், மழையால் சாய்ந்த வெற்றிலை விவசாயிகளுக்கு ரூ. பலஆயிரம் இழப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில்காற்று, மழை காரணமாக பணப்பயிரான வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக நெல்,பருத்தி, மிளகாய் மற்றும் எண்ணெய் வித்துகள், சிறுதானியபயிறுகள் மற்றும் தென்னை சாகுபடி செய்கின்றனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் பணப்பயிரான நாட்டு வெற்றிலை
 புயல், மழையால் சாய்ந்த வெற்றிலை விவசாயிகளுக்கு ரூ. பலஆயிரம் இழப்பு

ராமநாதபுரம் : மாவட்டத்தில்காற்று, மழை காரணமாக பணப்பயிரான வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக நெல்,பருத்தி, மிளகாய் மற்றும் எண்ணெய் வித்துகள், சிறுதானியபயிறுகள் மற்றும் தென்னை சாகுபடி செய்கின்றனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் பணப்பயிரான நாட்டு வெற்றிலை சாகுபடிமேற்கொள்ளப்படுகிறது.ரெகுநாதபுரம், பனைக்குளம், அழகன்குளம்,ஆற்றங்கரை, தங்கச்சிமடம், புதுமடம் ஆகிய இடங்களில் நாட்டு வெற்றிலை சாகுபடி செய்கின்றனர். புயல், மழையால் வெற்றிலைக்கொடி சாய்ந்து கீழேவிழுந்து விவசாயிகளுக்கு ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியபட்டினம் விவசாயி நாராயணன் கூறுகையில், 50 சென்டில் நாட்டுவெற்றிலை சாகுபடி செய்தேன். விதைநட்டு 8 மாதங்களுக்கு பிறகு தான் பலன் கிடைக்கிறது. மதுரையில் ஒரு கிலோ அகத்தி விதை ரூ.1800க்கு வாங்கி, அதனை விதைத்து, கொடிப்பந்தல் அமைத்தல், ஆட்கள் கூலி என ரூ.5 லட்சம் வரை செலவாகியுள்ளது.ஒரு கிலோ (700 எண்ணம் கட்டு) வெற்றிலை ரூ.300க்கு விற்கிறோம். ஆடி, ஆவணியில் பலத்தகாற்று, மழையால் 20 சென்ட் அளவிற்கு வெற்றிலைக்கொடி சாய்ந்து அழுகிவிட்டது. ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதும் காற்று, மழை தொடர்வதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தங்கச்சிமடம், புதுமடம், அழகன்குளம் பகுதியில் பலர் வெற்றிலை சாகுபடியை தவிர்த்துவிட்டனர்.இந்நிலை நீடித்தால் வெற்றிலைசாகுபடி முற்றிலும் அழிந்துவிடும். ஆகையால் எங்களுக்கு இழப்பீடுவழங்க அரசு உத்தரவிட வேண்டும்,'என்றார்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X