தள்ளுபடி நகைகளை பெற லஞ்சம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்| Dinamalar

தமிழ்நாடு

தள்ளுபடி நகைகளை பெற லஞ்சம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

Added : செப் 25, 2021
Share
விருதுநகர் : ''தள்ளுபடி நகைகளை திரும்ப அளிக்க பல கூட்டுறவு வங்கிகளில் 10 சதவீதம் முதல் லஞ்சம் கேட்பதாக,'' விவசாயிகள் குற்றம்சாட்டினர்.கொரோனாவால் தடைபட்டிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நெடு நாட்களுக்கு பின் ஜூலையில் நடந்த பின் நேற்று நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், சப் கலெக்டர் பிரிதிவிராஜ், புலிகள் காப்பக
 தள்ளுபடி நகைகளை பெற லஞ்சம்    குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்


விருதுநகர் : ''தள்ளுபடி நகைகளை திரும்ப அளிக்க பல கூட்டுறவு வங்கிகளில் 10 சதவீதம் முதல் லஞ்சம் கேட்பதாக,'' விவசாயிகள் குற்றம்சாட்டினர்.கொரோனாவால் தடைபட்டிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நெடு நாட்களுக்கு பின் ஜூலையில் நடந்த பின் நேற்று நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், சப் கலெக்டர் பிரிதிவிராஜ், புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ். நாராயணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் ரவிச்சந்திரன், தோட்டகலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மைப் பொறியியல் செயற் பொறியாளர் சங்கர் ராஜ், வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம், விற்பனை) சரஸ்வதி பங்கேற்றனர்.விவசாயிகள் விவாதம்:ராமச்சந்தின்ராஜா ( ராஜபாளையம்) : 2018 - -19 750 விவசாயிகள் ரூ. 10 கோடி மதிப்பு கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்தோம். அதற்குரிய தொகை இன்று வரை வழங்கவில்லை. தற்போது அந்த ஆலை திவாலாகி விட்டதாக மஞ்சள் நோட்டீஸ் விட்டுள்ளனர்.

அரசு தரப்பில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும். தற்போது் 10 ஆயிரம் ஏக்கர் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. இதை கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.கலெக்டர்: மஞ்சள் நோட்டீஸ் விட்ட கம்பெனிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதில் அனுப்பிய பின் நடவடிக்கை மேற்கொள்ள 2 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். தற்போதைய கரும்புகளை கொள்முதல் செய்ய மாற்று நடவடிக்கைக்கு கடிதம் எழுதப்படும்.நாராயணசாமி(சிவகாசி): விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் 100 நாள் திட்டத்திற்கு சென்று விடுவதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் வருவதில்லை.

ஊராட்சி நிர்வாகம் மூலம் 100 நாள் பணியில் இருப்பவர்களை விவசாய பணிகளுக்கு பிரித்து அனுப்ப வேண்டும்.கலெக்டர்: அரசிற்கு தெரிவிக்கப்படும்.பாஸ்கரன்(குமிழங்குளம்): அனுமதி இன்றி நடக்கும் கனிமவள திருட்டை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கடத்தல் டிராக்டர்களை நிறுத்தாமல் ,விவசாய பணி டிராக்டரை நிறுத்தி ஆவணங்களைகேட்கின்றனர்.கலெக்டர்: தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்புராஜ்(கவலுார்): விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி , மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு 20201- - 21 க்கான பயிர்காப்பீட்டு தொகைஇது வரை வழங்கவில்லை.கலெக்டர்: வழங்கப்படாத அனைவருக்கும் அக்டோபரில் வழங்கப்படும்.வெங்கடசாமி ( முத்துலிங்கபுரம்): தள்ளுபடி நகைகளை திரும்ப அளிக்க பல கூட்டுறவு வங்கிகளில் 10 சதவீதம் முதல் விவசாயிகளிடம் கமிஷன் கேட்கின்றனர். எங்களிடம் லஞ்சம் வாங்குவது எங்களை மேலும் கடனில் தள்ளும் வகையில் உள்ளது.

சில விவசாயிகள் வேறு வழி இன்றி கேட்ட பணத்தை கொடுக்கின்றனர்.கலெக்டர்: புகார் அளியுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அம்மையப்பன்( சேத்துார்): டி.ஏ.பி., யூரியா போன்ற உரங்கள் சரியாக கிடைப்பதில்லை. சல்பர், நானோ யூரியா போன்ற தேவையில்லாத பொருட்களை வாங்கா விட்டால் உரம் வழங்க மறுக்கின்றனர்.கலெக்டர்: 5903 டன் உரம் இருப்பு உள்ளது. மேலும் உரம் வந்து கொண்டிருக்கிறது. உர தட்டுபாடு ஏற்பட வாய்பில்லை. முறைகேடில் ஈடுபடும் உரகடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.முத்தையா (வம்சாபுரம்): கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் வழங்கும் போது உரமும் வாங்கி செல்ல கூறுகின்றனர். வாங்கவில்லை என்றால் உரத்திற்கான தொகையை திரும்ப அனுப்பி விடுவோம் என்கின்றனர்.

விவசாய பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாதவர்கள் உரம் வாங்க முடியாத சூழல் உள்ளது.கலெக்டர்: 186 சொசைட்டிகளிலும் போதுமான அளவிற்கு உரம் உள்ளது. உரம் இருக்கும் போதே வங்கி கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படி கூறியிருப்பார்கள். பின்னர் உரம் வாங்கி கொள்ள அனுமதித்தால் அந்தந்த மாதத்திற்கான உரம் ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.அரை நிர்வாணத்துடன் விவசாயிகள்கரும்பு விவசாயிகளுக்கு விற்பனை செய்த தொகை பல போராட்டங்களுக்கு பின்னரும் வழங்கப்படாததால், கரும்பு விவசாயிகள் அரை நிர்வாணமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X