பொது செய்தி

தமிழ்நாடு

15 ஆண்டாகியும் வசதிகளை காணோம் அவதியில் அமீர் பாளையம் மக்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சாத்துார் : சத்திரப்பட்டி ஊராட்சி உட்பட்ட அமீர் பாளையத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளான ரோடு, சாக்கடை , கழிப்பறை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பகுதியில் விநியோகம் ஆகும் குடி நீர் உப்புத் தண்ணீராக உள்ளதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை குடம் ஒன்று ரூ. பத்து கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர் .
 15 ஆண்டாகியும் வசதிகளை காணோம்  அவதியில் அமீர் பாளையம் மக்கள்



சாத்துார் : சத்திரப்பட்டி ஊராட்சி உட்பட்ட அமீர் பாளையத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளான ரோடு, சாக்கடை , கழிப்பறை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இப்பகுதியில் விநியோகம் ஆகும் குடி நீர் உப்புத் தண்ணீராக உள்ளதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை குடம் ஒன்று ரூ. பத்து கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர் . நடுத்தர மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.உப்புத்தண்ணீர் அடி குழாய்கள் மண்ணில் புதைந்தும் பழுதான நிலையில் காணப்படுகிறது.குடியிருப்பு பகுதியில் உலா வரும் பன்றிகளால் தொற்றுநோய் அபாயம் உள்ளது.

சாக்கடைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது. கற்கள் பெயர்ந்து காலி மனைகளில் சாக்கடை தேங்கி நிற்கிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி இரவில் மட்டுமின்றி பகலிலும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்ஆண் ,பெண்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் இல்லாத நிலையில் வைப்பாறு கரையை, காலி மனைகளையும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ரேஷன் கடை கூரை சேதமடைந்து தரைதளம் பெயர்ந்தும் உள்ளது. ஊழியர்கள் அச்சத்துடன் பணி புரிகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X