பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலத்தில் வேளாண் பணிக்கு ரூ.95 லட்சம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்ட வேளாண் துறை சார்பில், ஒருங்கிணைந்தபண்ணையத்திட்டத்தில் முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில்ரூ.95 லட்சம் ஒதுக்கீட்டில் 200 எக்டேரில்விவசாயப்பணி செயல்படுத்தப்படஉள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரி மழையளவு 827 மி.மீ., ஆகும்.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி அவர்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்

ராமநாதபுரம் : மாவட்ட வேளாண் துறை சார்பில், ஒருங்கிணைந்தபண்ணையத்திட்டத்தில் முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில்ரூ.95 லட்சம் ஒதுக்கீட்டில் 200 எக்டேரில்விவசாயப்பணி செயல்படுத்தப்படஉள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரி மழையளவு 827 மி.மீ., ஆகும்.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி அவர்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் செயல்படுகிறது.இதன் மூலம்விளைநிலத்தை மேம்படுத்தி இயற்கை இடர்பாடு காலத்தில் ஏற்படும்இழப்புகளை ஈடுசெய்வதற்கு வழிஏற்படுகிறது. 2021 - 22 ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் முதுகுளத்துார்,ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரூ.95 லட்சம் ஒதுக்கீட்டில் 200 எக்டேர்விவசாயப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தேர்வானகிராமங்களில் வேளாண், தோட்டக்கலை, கால்நடைபராமரிப்பு துறை மூலம் 200 விவசாயிகள் பயனாளியாக இணைக்கப்பட உள்ளனர்.

ஒரு விவசாயிக்கு 1 எக்டேர் பரப்புநிலம் இருக்க வேண்டும். இதில், ரூ.90ஆயிரம் செல்வில்செயல் விளக்க திடல், தீவன பயிர்சாகுபடி, காடுகள் வளர்ப்பு, கறவை மாடு,10 ஆடுகள், 15 நாட்டுக்கோழிகள், பழமரக்கன்றுகள், 2 தேனீ வளர்ப்புபெட்டி போன்றவை அமைக்க வேண்டும்.இவர்களுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.45ஆயிரம் வங்கிகணக்கில் வரவுவைக்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் தகுந்த ஆவணங்களுடன்வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவேளாண் இணை இயக்குனர் எஸ்.டாம்.பி.சைலேஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X