பொது செய்தி

தமிழ்நாடு

சி.டி.ஸ்கேன் பழுது நோயாளிகள் அவதி

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பழுதடைந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது.கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை ஆன்லைனில் ஏற்றுவதற்கு தேவையான பணியாளர் இல்லாத நிலையில் தடுப்பூசி போட்டவர்களும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பழுதடைந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது.கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை ஆன்லைனில் ஏற்றுவதற்கு தேவையான பணியாளர் இல்லாத நிலையில் தடுப்பூசி போட்டவர்களும் சிரமப்படுகின்றனர்.இதனிடையே இங்குள்ள சி.டி.ஸ்கேன் பழுதடைந்துள்ளது. விபத்து மற்றும் அடிதடி வழக்குகளில் காயம் அடைந்தவர்களுக்கு ஸ்கேன் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தனியார் ஸ்கேன் மையங்களில் ரூ.2500 வரை செலவாகும் நிலையில், ஏழைகள் தவிக்கின்றனர்.பழுது பார்க்க சென்னையில் இருந்து டெக்னீசியன் வரவேண்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.உடனடியாக பழுதை சரி செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X