பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாப்களில் நிற்காத பஸ்களால் பெண்கள், மாணவர்கள் பாதிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில் பஸ்கள் நிற்காததால் பெண்கள், மாணவர் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியூர், உள்ளூர்களுக்கு இயக்கப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சர்ச் ஸ்டாப், அரண்மனை உள்ளிட்ட இடங்களில் ஒதுக்கப்பட்ட பஸ்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில் பஸ்கள் நிற்காததால் பெண்கள், மாணவர் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியூர், உள்ளூர்களுக்கு இயக்கப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சர்ச் ஸ்டாப், அரண்மனை உள்ளிட்ட இடங்களில் ஒதுக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் சற்று தள்ளி அல்லது முன்னால் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர்.இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் ஓடிவந்து பஸ்சில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர்.இலவசம் என்பதால் பெண்கள்கூட்டத்தை கண்டால் சில பஸ்கள் நிற்காமல் சென்று விடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகையால் ஒதுக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில் நின்று பயணிகளை ஏற்றிசெல்ல வேண்டும். அதற்கு போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X