பொது செய்தி

தமிழ்நாடு

திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவருக்கு சிறந்த விஞ்ஞானி விருது

Added : செப் 25, 2021
Share
Advertisement
கம்பம் : ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையாவிற்கு, தோட்டக்கலை பழப்பயிர்கள் பிரிவில் சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது.கோவை வேளாண் பல்கலை. சர்வதேச தோட்டக்கலை கருத்தரங்கு நடந்தது. ''அடுத்த தலைமுறை தோட்டக்கலை'' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இதில்

கம்பம் : ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையாவிற்கு, தோட்டக்கலை பழப்பயிர்கள் பிரிவில் சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது.

கோவை வேளாண் பல்கலை. சர்வதேச தோட்டக்கலை கருத்தரங்கு நடந்தது. ''அடுத்த தலைமுறை தோட்டக்கலை'' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இதில் தேனி, ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையாவிற்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது. இவர் 8 ஆண்டுகளாக திராட்சை ஆராய்ச்சி மையத்தில் உதவி பேராசிரியராகவும், தற்போது தலைவராக உள்ளார். இவர் திராட்சை, வாழை, மா பழப் பயிர்களில் புதிய ரகங்கள் அறிமுகம், நவீன தொழில்நுட்பம், கூடுதல் மகசூல் பெற ஊக்குவித்தல் போன்றவற்றிற்காக விருது வழங்கப்பட்டது. கோவை வேளாண் பல்கலை., துணைவேந்தர் குமார் விருது வழங்கினார். விருது பெற்ற சுப்பையாவிற்கு விவசாயிகள், பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X