பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து போலீசார் நடவடிக்கை அவசியம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
வேடசந்துார் : வேடசந்துார் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேடசந்துார் நகர் பகுதியில் காலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. குறிப்பாகவடமதுரை ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.இப்பகுதியில் இருமேல்நிலை பள்ளிகளுக்குசெல்லும் மாணவ, மாணவிகள், ஒன்றிய, வேளாண்,

வேடசந்துார் : வேடசந்துார் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேடசந்துார் நகர் பகுதியில் காலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

குறிப்பாகவடமதுரை ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.இப்பகுதியில் இருமேல்நிலை பள்ளிகளுக்குசெல்லும் மாணவ, மாணவிகள், ஒன்றிய, வேளாண், ஊட்டச்சத்துஅலுவலகங்களுக்கு செல்வோர், நுாற்பாலைகளுக்கு செல்வோர் என இந்த வழித்தடம் 'பிசி'யாகவே உள்ளது.இந்த அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்களால் நெருக்கடிஏற்படுகிறது.

இவை தவிர இந்த ரோட்டில் கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்படும் வாடிக்கையாளர்களின் வாகனங்களாலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.தினமும் காலை 8:00 முதல் 10:00 மணி வரையும், மாலை 3:00 முதல் 7:00மணி வரையும் இந்த பகுதியில் போலீசாரை நிறுத்தி, போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். அதேபோல் ஆத்துமேடு பகுதியிலும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும். இங்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இருந்தும்இதில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது. மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X