தமிழ்நாடு

விலை இல்லாததால் வெட்டப்படும் பப்பாளி

Added : செப் 25, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி : பப்பாளிக்கு விலை கிடைக்காததால் மரங்களை வெட்டி மாற்று சாகுபடிக்கு விவசாயிகள் நிலத்தை தயார் படுத்துகின்றனர்.செங்கட்டாம்பட்டி, அய்யம்பட்டி நல்லாம்பிள்ளை பகுதிகளில் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பப்பாளிக்கு நல்ல விலை கிடைத்தது. விவசாயிகளிடம் காயாகவும், பழமாகவும் கொள்முதல் செய்தனர்.கொரோனா பரவல் காலகட்டங்களில்
 விலை இல்லாததால் வெட்டப்படும் பப்பாளி

பட்டிவீரன்பட்டி : பப்பாளிக்கு விலை கிடைக்காததால் மரங்களை வெட்டி மாற்று சாகுபடிக்கு விவசாயிகள் நிலத்தை தயார் படுத்துகின்றனர்.

செங்கட்டாம்பட்டி, அய்யம்பட்டி நல்லாம்பிள்ளை பகுதிகளில் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பப்பாளிக்கு நல்ல விலை கிடைத்தது. விவசாயிகளிடம் காயாகவும், பழமாகவும் கொள்முதல் செய்தனர்.கொரோனா பரவல் காலகட்டங்களில் பப்பாளிக்கு அதிக தேவை ஏற்பட்டதால் நல்ல விலை கிடைத்தது.

கொரோனா ஊரடங்கிற்குப் பின்பு ஏற்றுமதியும் குறைந்து விட்டதால் தேவையும் குறைந்து விட்டது. இதனால் விலை கிடைக்கவில்லை. எனவே இப்பகுதி விவசாயிகள் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றனர். விலை குறைவால் போக்குவரத்து செலவு கூட கிடைக்கவில்லை. எனவே ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்த பப்பாளி மரங்களை டிராக்டரை ஓட்டி அழித்து விட்டு, விவசாயிகள் மாற்று விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X