வனப்பகுதியில் உயர் கோபுரம் அமைக்க முடிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் உயர் கோபுரம் அமைக்க முடிவு

Added : செப் 25, 2021
Share
தேனி : தேனி மாவட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக நடமாடும் நபர்கள், வேட்டை கும்பலை கண்காணிக்க வசதியாக போலீசார், வனத்துறையினருடன் இணைந்து வனப்பகுதியில் உயர் கோபுரங்கள் அமைக்க முடிவு செய்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் கம்பம்மெட்டு, போடிமெட்டு, பெரியகுளம் முருகமலை, வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருந்தது. நக்சல் ஒழிப்பு போலீசார், க்யூ பிரிவு


தேனி : தேனி மாவட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக நடமாடும் நபர்கள், வேட்டை கும்பலை கண்காணிக்க வசதியாக போலீசார், வனத்துறையினருடன் இணைந்து வனப்பகுதியில் உயர் கோபுரங்கள் அமைக்க முடிவு செய்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் கம்பம்மெட்டு, போடிமெட்டு, பெரியகுளம் முருகமலை, வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருந்தது.

நக்சல் ஒழிப்பு போலீசார், க்யூ பிரிவு போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது வனப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக நடமாடுவதோடு, வனவிலங்குகளை வேட்டையாடுகிறார்கள். இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையுடன் போலீசார் கைகோர்த்துள்ளனர். இதன் முதற்கட்டமாக முக்கிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி வனப்பகுதியில் வனத்துறையினருக்கு எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளது என்ற விபரங்களை போலீசார் கேட்டுள்ளனர். இந்த விபரங்கள் கிடைத்த பிறகு புதிய இடங்களில் உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 24 மணிநேரமும் ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X