திண்டுக்கல்லில் ஒரே நாள் ரவுடிகளுக்கு எஸ்.பி., எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் ஒரே நாள் ரவுடிகளுக்கு எஸ்.பி., எச்சரிக்கை

Added : செப் 25, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் 44 ரவுடிகள் உட்பட 339 பேரை போலீசார் கைது செய்தனர்.மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தினமும் அதிகரித்து வருகிறது. பூட்டு நகரம் சமீப நாட்களாக 'கொலை' நகரமாக உருமாறி வருகிறது. குற்றச் செயல்களை தடுக்க கைது நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக களம் இறங்கினர். நேற்று முன்தினம் (செப்.23) மாலை முதல் தீவிர வாகன


திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் 44 ரவுடிகள் உட்பட 339 பேரை போலீசார் கைது செய்தனர்.மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தினமும் அதிகரித்து வருகிறது.

பூட்டு நகரம் சமீப நாட்களாக 'கொலை' நகரமாக உருமாறி வருகிறது. குற்றச் செயல்களை தடுக்க கைது நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக களம் இறங்கினர். நேற்று முன்தினம் (செப்.23) மாலை முதல் தீவிர வாகன சோதனை, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் சோதனை முடுக்கி விடப்பட்டன.இதனால் 44 ரவுடிகள், சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 249 பேர், நன்னடத்தை பிணையை மீறிய 6 பேர், வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 3 பேர், மது போதையில் தகராறில் ஈடுபட்ட 37 பேர் என மொத்தம் 339 பேரை ஒரே நாள் இரவில் போலீசார் கைது செய்தனர்.

இதில் ஆயுதங்களுடன் பிடிபட்ட ஒருவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் கூறுகையில், ''குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் அமைதியை குலைக்கும் ரவுடிகளின் குற்றச் செயல்களை ஒடுக்கவும் இதுபோன்ற நடவடிக்கை தொடரும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X