கோர்ட் செய்தி

தமிழ்நாடு

‛தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்': உயர் நீதிமன்றம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் இனிமேல் யானைகளை பிடித்து தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவில் யானைகளுக்கு பாகன்களை நியமிக்கவும், முறையாக பராமரிக்கவும் கோரிய வழக்கை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கோவில் யானை, வளர்ப்பு யானை, வனத் துறை யானைகளின் எண்ணிக்கை,

சென்னை-தமிழகத்தில் இனிமேல் யானைகளை பிடித்து தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



கோவில் யானைகளுக்கு பாகன்களை நியமிக்கவும், முறையாக பராமரிக்கவும் கோரிய வழக்கை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கோவில் யானை, வளர்ப்பு யானை, வனத் துறை யானைகளின் எண்ணிக்கை, வயது, உடல் நிலை குறித்த அறிக்கையை, 'வீடியோ' பதிவுடன் தாக்கல் செய்ய, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இதையடுத்து வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், வழக்கறிஞர் ஹர்ஷராஜ் ஆஜராகி, ''கோவில்களில் 32; தனியார் கட்டுப்பாட்டில் 31; வனத்துறை கட்டுப்பாட்டில் 64 யானைகள் உள்ளன. வீடியோ பதிவு செய்யும் பணி நடப்பதால் அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார்.'எல்சா பவுண்டேஷன்' என்ற அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகள் தவிர்த்து, 86 யானைகள் இருப்பதாக, 2019ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைக்கு மாநில அரசு தெரிவித்துள்ளது. 'தற்போது, மாநில அரசு தெரிவித்துள்ள எண்ணிக்கையை பார்க்கும்போது 23 யானைகள் பற்றிய விபரங்கள் இல்லை' என்றார்.


latest tamil news



அதைத் தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:யானைகள் எண்ணிக்கை மற்றும் யானைகள் தொடர்பாக, ஐந்து ஆண்டுகளில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்துக்கு விபரங்கள் வழங்கியிருந்தால், அதை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்.காட்டில், உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைகளை, சிகிச்சை அளிப்பதற்காக கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.அதைத் தவிர்த்து, வேறு எந்த வகையிலும் யானைகளை இனிமேல் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வராமல் இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.

தனி நபர்கள் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கும் யானைகள் தவிர்த்து, மற்றபடி யானைகளை தனி நபர்கள் எவரும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது. விசாரணை, அக்., 21க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parivel - Blore,இந்தியா
25-செப்-202110:51:16 IST Report Abuse
Parivel கோர்ட்டு மட்டும் ஒரு நீதிபதி கட்டுப்பாட்டில் இருக்கலாமா? தேர்தல் நடத்தி திர்ப்பு சொல்லலாமா? வர வர இந்த நீதி ஏன் இப்படி போச்சி?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-செப்-202110:35:44 IST Report Abuse
vbs manian கேரளாவில் வீட்டுக்கு வீடு யானை உள்ளது என்று செய்தி.
Rate this:
Cancel
விசு பாய் , சென்னை நேற்று முதலில் சொன்னது தனிநபர் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. அதற்கு பிறகு தற்போது இருப்பதை தவிர புதிதாக எவரும் வைத்திருக்க கூடாது. இவர்கள் நீதி வழங்கி... ..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X