பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்; ஓடை தூர்வாராததால் ரோட்டிற்கு வரும் மழைநீர் சின்னமனூர் நகராட்சி 2வது வார்டு அவலம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சின்னமனுார் : பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம், புதர் மண்டிய ஓடை, குடிநீர் விநியோகத்தில் குளறுபடியால் சின்னமனுார் நகராட்சி 2 வது வார்டு பொன்னகர் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சின்னமனுார் நகராட்சியில் நாளுக்கு நாள் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. நகருக்குள் உள்ள வீதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கி வருகிறது. இதில் நகராட்சி 2 வது வார்டில்
 பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்; ஓடை தூர்வாராததால் ரோட்டிற்கு வரும் மழைநீர்   சின்னமனூர் நகராட்சி 2வது வார்டு அவலம்

சின்னமனுார் : பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம், புதர் மண்டிய ஓடை, குடிநீர் விநியோகத்தில் குளறுபடியால் சின்னமனுார் நகராட்சி 2 வது வார்டு பொன்னகர் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சின்னமனுார் நகராட்சியில் நாளுக்கு நாள் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. நகருக்குள் உள்ள வீதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கி வருகிறது. இதில் நகராட்சி 2 வது வார்டில் பொன்னகர் பகுதி மிக மோசமான நிலை உள்ளது. இங்கு பொதுச்சுகாதாரம், குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு என அனைத்திலும் மோசமான நிலை உள்ளது. பொன்னகரில் நுழையும் இடத்தில் 2011 -20-12 ல் திறந்தவெளி கழிப்பிடத்தை தடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள், குளிக்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இவை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அருகில் பொன்னகர் ஓடை மலைக்குன்றுகளிலிருந்து மழை காலங்களில் வரும் வெள்ளம் பல கி.மீ., துாரம் ஓடை வழியாக சென்று எரியூட்டு மயானம் அருகில் உள்ள சின்னவாய்க்காலில் கலக்கும். இந்த ஓடை துார்வாராததால் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால் மழை காலங்களில் வெள்ளநீர் ரோட்டில் செல்வதால் ரோட்டை பயன்படுத்த முடியவில்லை. இப்பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி மாதக்கணக்கில் மேற்கொள்வதால் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் துாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.வீணாகிய கழிப்பறைசங்கரேஸ்வரன், பொன்னகர், சின்னமனுார்: பொன்னகரில் சுகாதார வளாகம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் கட்டண கழிப்பறையாக இருந்தது. ஆனால் பொதுமக்களும் பயன்படுத்த முன்வரவில்லை. நகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ரூ. 10 லட்சம் செலவில் கட்டிய கழிப்பிடம் வீணாகி பராமரிப்பு இன்றி உள்ளது. சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
.
அத்துடன் பொன்னகர் ஓடையை துார்வார வேண்டும். கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.இருளில் தவிப்புசுவாமிநாதன், சின்னமனுார்: நகரை விட்டு வெளியில் உள்ள குடியிப்பு பகுதிகளுக்கு அதிகாரிகள் வருவது இல்லை. பொன் நகரில் பயன்பாடு இல்லாத சுகாதார வளாகத்திற்கு பல ஆண்டுகளாக நகராட்சி மின் கட்டணம் செலுத்துகிறது. நவீன சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்திட வேண்டும். நகருக்கு வெளியில் 2வது வார்டு இருப்பதால் போதிய தெருவிளக்குகள் இல்லை. விளக்கு வசதி இல்லாததால் பெண்கள் இரவில் வெளியில் வர அச்சமடைகின்றனர். இருளில் தவிக்கின்றோம்.சாக்கடை சுத்தம் செய்வதையும், கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X