பொது செய்தி

தமிழ்நாடு

 எம்.எல்.ஏ., துவக்கிய பஸ் ரூட்ஒரே நாளில் முடங்கிய பரிதாபம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்த பஸ் ரூட் ஒரு நாள் மட்டும் சென்று வந்தது. அதன்பின் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை என 3கிராம மக்கள் புலம்புகின்றனர். .உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சியை ஒட்டி பரமத்தேவன்பட்டி உள்ளது. இக் கிராமங்களுக்கு கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி. கோகிலாபுரம் வழியாக

உத்தமபாளையம் : கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்த பஸ் ரூட் ஒரு நாள் மட்டும் சென்று வந்தது. அதன்பின் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை என 3கிராம மக்கள் புலம்புகின்றனர்.

.உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சியை ஒட்டி பரமத்தேவன்பட்டி உள்ளது. இக் கிராமங்களுக்கு கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி. கோகிலாபுரம் வழியாக ராமசாமிநாயக்கன்பட்டி முத்துலாபுரம் செல்லும் வகையில் பஸ் சேவை இருந்தது. அந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன்

சில வாரங்களுக்கு முன் உத்தமபாளையம் - தென்பழனி பஸ் சேவையை துவக்கி வைத்தார். டவுன் பஸ் உத்தமபாளையம் ராமசாமிநாயக்கன்பட்டி, பரமத்தேவன்பட்டி, முத்துலாபுரம் வழியாக தென்பழனி செல்லும் வகையில் சேவை இருந்தது. எம்.எல்.ஏ., துவக்கி வைத்த ஒருநாளுடன் இச் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டது பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். மீண்டும் பஸ் சேவை தொடர எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X