பொது செய்தி

தமிழ்நாடு

கூடைப்பந்து மைதானத்திற்கு'கேலரி' வசதி கிடைக்குமா

Added : செப் 25, 2021
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் கூடைப்பந்து மைதானத்தில் பார்வையாளர் அமர வசதியாக 'கேலரி' வசதி ஏற்படுத்த வேண்டும்.வடமதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட காலம் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. ஆனால் போட்டி நடத்த நன்கொடையாளர் கிடைக்காமல் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட

வடமதுரை : வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் கூடைப்பந்து மைதானத்தில் பார்வையாளர் அமர வசதியாக 'கேலரி' வசதி ஏற்படுத்த வேண்டும்

.வடமதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட காலம் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. ஆனால் போட்டி நடத்த நன்கொடையாளர் கிடைக்காமல் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானம் பயனற்று கிடந்தது. தற்போது இளம்வீரர்களை உருவாக்கும் நோக்கில் வடமதுரையை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற ராணுவவீரர் கோபால் தலைமையில் ஆறுமுகம், பூமிநாதன், சின்னா, முத்துக்குமார் ஆகியோர் காலை, மாலை நேரங்களில் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி தந்து வருகின்றனர். சமீபத்தில் உள்ளூர் வீரர்களை 4 அணிகளாக பிரித்து 'லீக்' மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.இங்கு பார்வையாளர் மாடம் (காலரி) இல்லாததால் பயிற்சி பெறும் மாணவர்கள் ஓய்வெடுக்க, பொதுமக்கள் உட்கார வசதியின்றி பரிதவிக்கின்றனர். எனவே இங்கு 'காலரி' வசதி அமைத்து தர வேண்டும் என காந்திராஜன் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளிடம் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X