பொது செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னருக்கு குப்பை மாற்றும் பணி மந்தம்: மணிக்கணக்கில் காத்திருக்கும் வாகனங்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை;கன்டெய்னருக்கு குப்பையை மாற்ற, உக்கடம் மையத்தில் மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்கின்றன.கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. இவற்றை, உக்கடம் மற்றும் பீளமேட்டில் உள்ள மையத்தில், கன்டெய்னருக்கு மாற்றி, வெள்ளலுார் கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.சிறிய வாகனங்களில் சேகரிக்கும் குப்பையை மட்டும் அவ்வாறு சேகரித்து விட்டு, டிப்பர்
 கன்டெய்னருக்கு குப்பை மாற்றும் பணி மந்தம்: மணிக்கணக்கில் காத்திருக்கும் வாகனங்கள்

கோவை;கன்டெய்னருக்கு குப்பையை மாற்ற, உக்கடம் மையத்தில் மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்கின்றன.கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. இவற்றை, உக்கடம் மற்றும் பீளமேட்டில் உள்ள மையத்தில், கன்டெய்னருக்கு மாற்றி, வெள்ளலுார் கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
சிறிய வாகனங்களில் சேகரிக்கும் குப்பையை மட்டும் அவ்வாறு சேகரித்து விட்டு, டிப்பர் லாரிகள் வெள்ளலுாருக்கு நேரடியாக அனுப்பப்பட்டன. இதனால், மாநகராட்சிக்கு தேவையற்ற டீசல் செலவினம் ஏற்பட்டது.இதை கண்டுபிடித்த, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், 'இனி, உக்கடம், பீளமேடு மையத்தில் இருந்து கன்டெய்னர் மூலமாக மட்டுமே குப்பை எடுத்துச் செல்ல வேண்டும். மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனமே, அவற்றை கையாள வேண்டும்' என உத்தரவிட்டார்.அதன்படி, குப்பை சேகரித்த வாகனங்கள், பீளமேடு மற்றும் உக்கடம் மையத்தில் அணிவகுத்து நிற்கின்றன.குப்பையை கன்டெய்னருக்கு மாற்றுவதற்கு தாமதமாவதால், வாகனங்கள், மூன்று மணி நேரம் காத்திருக்கின்றன.இதனால், மீண்டும் வீதிகளுக்குச் சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கிறது.
தாமதமின்றி, குப்பையை கன்டெய்னருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாமதம் ஏற்படுவது ஏன்?உக்கடம் மையத்தில் பணிபுரிவோர் கூறுகையில், 'நாளொன்றுக்கு, 175 டன் குப்பை கையாள்வதற்கே வசதி இருக்கிறது. இப்போது, டிப்பர் லாரிகளிலும் குப்பை கொண்டு வரப்படுகிறது. 350 டன் வரை கையாள்வதால் தாமதமாகிறது. டிப்பர் லாரிகளில் இருந்து குப்பை கொட்டும்போது, இயந்திரங்களில் சிக்கிக் கொள்கிறது. காய்கறி கழிவுகளை தனியாக கொண்டு செல்வதால், அவ்வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X