பொது செய்தி

தமிழ்நாடு

நஞ்சுண்டாபுரம் வாய்க்காலை மீட்க நடக்கிறது நில அளவீடு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை;நஞ்சுண்டாபுரம் பாசன வாய்க்காலை மீட்க, நில அளவை செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.உக்கடம் பெரிய குளத்தில் தேக்கப்படும் தண்ணீரை, தென்கிழக்கு பகுதியில் உள்ள மதகு வழியாக திருப்பி விட்டால், கரும்புக்கடை மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள நிலங்கள், பாசன வசதி பெறும். கரும்புக்கடை வழியாக சிங்காநல்லுார் குளத்துக்கு

கோவை;நஞ்சுண்டாபுரம் பாசன வாய்க்காலை மீட்க, நில அளவை செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.உக்கடம் பெரிய குளத்தில் தேக்கப்படும் தண்ணீரை, தென்கிழக்கு பகுதியில் உள்ள மதகு வழியாக திருப்பி விட்டால், கரும்புக்கடை மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள நிலங்கள், பாசன வசதி பெறும். கரும்புக்கடை வழியாக சிங்காநல்லுார் குளத்துக்கு செல்வதற்கேற்ப, நஞ்சுண்டாபுரம் பாசன வாய்க்கால் இருந்தது. இது புதர்மண்டி, ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கிறது.இவ்வழித்தடத்தை மீட்டு, பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் தர வேண்டுமென, உக்கடம் - பெரிய குளம் பாசனம் மற்றும் கிராம விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பியிருக்கின்றனர்.இச்சூழலில், இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'அனுப்பர்பாளையம், புலியகுளம், நஞ்சுண்டாபுரம் வழியாக செல்லும் பாசன வாய்க்கால், நீண்டகாலமாக உபயோகம் இல்லாமல் துார்த்துப்போய், ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை மீட்டெடுக்க நில அளவை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நில அளவை செய்ததும், மதிப்பீடு தயாரித்து, பணிகள் மேற்கொள்ளப்படும்' என, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X