சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

Added : செப் 25, 2021
Share
Advertisement
செட்டிபாளையம்:செட்டிபாளையம் பேருராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரத்தில், தனியார் நிறுவனம் ஒன்று நான்கு ஏக்கர் நிலம் வாங்கியது. இதில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை, கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கியது.இதனை சுற்றி வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரின் குறைதீர்க்கும் பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், செட்டிபாளையம் பேருராட்சி செயல்

செட்டிபாளையம்:செட்டிபாளையம் பேருராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரத்தில், தனியார் நிறுவனம் ஒன்று நான்கு ஏக்கர் நிலம் வாங்கியது. இதில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை, கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கியது.இதனை சுற்றி வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரின் குறைதீர்க்கும் பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், செட்டிபாளையம் பேருராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு, மனு அனுப்பியும் பலனில்லை.நேற்று காலை 30 பெண்கள் உட்பட, 60 பேர் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். அங்கு வந்த ஒத்தக்கால் மண்டபம் வருவாய் ஆய்வாளர் கோகிலா, நிர்வாகத்தினரிடம் பேசி, பணியை நிறுத்தச் செய்தார்.முற்றுகையிட்டவர்களிடம் அவர், ''எவ்வித பணிகளும் இனி நடக்காது. விரைவில், தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்," என உறுதியளித்தார். அனைவரும் கலைந்து சென்றனர். செட்டிபாளையம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.அப்பகுதியை சேர்ந்த லோகநாதன் கூறுகையில், "இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பில், தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவை விளைவிக்கப்படுகிறது. 300 மீட்டர் சுற்றளவுக்குள் வீடுகள் இருந்தால், தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்க கூடாது. ஆனால் தாசில்தார், வீடுகள் இல்லை என சான்றளித்துள்ளார்.தார் தொழிற்சாலை துவங்கப்பட்டால், விவசாயம் பாதிக்கப்பட்டு, எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். காற்றில் நச்சுத்தன்மை ஏற்படும். மாசு கட்டுப்பாடு வாரியம் தடையில்லா சான்று தரவில்லை. பணிகளை மீண்டும் துவங்கினால், எங்கள் போராட்டமும் தொடரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X