பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு, பயிற்சி துறையின் தனியார் துறை வேலை இணையம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் வேலை தேடும் இளைஞர்கள், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களை இணைக்கும் வகையில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளம் செயல்படுகிறது.தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்கள் இந்த இணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம்

மதுரை : தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் வேலை தேடும் இளைஞர்கள், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களை இணைக்கும் வகையில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளம் செயல்படுகிறது.

தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்கள் இந்த இணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறலாம். தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து அந்த இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்க இந்த இணையம் வழிவகை செய்கிறது.

வேலையளிப்போர், வேலை தேடுவோருக்கு இச்சேவை கட்டணமின்றி இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது.அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய, பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. அதற்கு மாற்றாக தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் பணி நியமனம் வசதிகளை உருவாக்கி தரப்பட்டுள்ளது. வேலை தேடுவோர், வேலையளிப்போர் இந்த வசதியை பயன்படுத்திடலாம் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X