பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர் விபரங்களை தெரிஞ்சுக்கிட்டா குற்றம் தடுக்கலாம்: தனியார் நிறுவனங்களுக்கு எஸ்.பி., அறிவுரை

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை;வடமாநில தொழிலாளர்களின் முறையான அடையாள அட்டை, விபரங்களை தனியார் நிறுவனத்தினர் பராமரிக்க வேண்டும் என, மாவட்ட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், தனியார் நிறுவன உரிமையாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உடனான, ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் பேசியதாவது:கோவை மாவட்டத்தில்
 வடமாநில தொழிலாளர் விபரங்களை தெரிஞ்சுக்கிட்டா குற்றம் தடுக்கலாம்: தனியார் நிறுவனங்களுக்கு எஸ்.பி., அறிவுரை

கோவை;வடமாநில தொழிலாளர்களின் முறையான அடையாள அட்டை, விபரங்களை தனியார் நிறுவனத்தினர் பராமரிக்க வேண்டும் என, மாவட்ட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், தனியார் நிறுவன உரிமையாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உடனான, ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் பேசியதாவது:கோவை மாவட்டத்தில் ஏற்படும் குற்றச்சம்பவங்களால், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் நடக்கும், கஞ்சா, கொலை, கொள்ளை, குட்கா விற்பனை ஆகிய குற்றச்சம்பவங்களில், அதிக வடமாநிலத்தினர் ஈடுபடுகின்றனர்.குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின், அடையாள அட்டைகளை பெற்று முறையாக பராமரிக்க வேண்டும்.
வடமாநில தொழிலாளர்கள் இடையே, ஏற்படும் பிரச்னைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களது நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை, 77081 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X