பொது செய்தி

தமிழ்நாடு

காலிபிளவர் விவசாயிகள் வேதனை

Added : செப் 25, 2021
Share
Advertisement
நெய்க்காரப்பட்டி : பழநி அருகே பாப்பம்பட்டி, மயிலாடும்பாறை பகுதிகளில் காலிபிளவரில் நோய் பாதிப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பழநியில் விவசாயிகள், பாப்பம்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி பகுதிகளில் வெண்டை, தக்காளி, காலிபிளவர் போன்றகுறுகியகால பயிர்களை சாகுபடி செய்கின்றனர். தற்போது பாப்பம்பட்டி பகுதியில் பயிரிட்டுள்ள காலிபிளவர் பயிரில் பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டு
 காலிபிளவர் விவசாயிகள் வேதனை

நெய்க்காரப்பட்டி : பழநி அருகே பாப்பம்பட்டி, மயிலாடும்பாறை பகுதிகளில் காலிபிளவரில் நோய் பாதிப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பழநியில் விவசாயிகள், பாப்பம்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி பகுதிகளில் வெண்டை, தக்காளி, காலிபிளவர் போன்றகுறுகியகால பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

தற்போது பாப்பம்பட்டி பகுதியில் பயிரிட்டுள்ள காலிபிளவர் பயிரில் பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டு காலிபிளவர் பூ முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.விவசாயி ராஜேஸ்வரி கூறியதாவது: எங்கள் தோட்டத்தில் 2.5 ஏக்கரில் காலிபிளவர் பயிரிட்டுள்ளோம். சமீபத்தில் பெய்த மழைக்குப் பின் காலிபிளவரில் பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பூவைக்கூட விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. இதுவரை ரூ.2 லட்சம் செலவிட்டும் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே காலிபிளவர் பயிருடன் நிலத்தை உழுவதற்கு திட்டமிட்டுள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X