பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் டிரைவருக்கு காது கேட்கிறதா என பரிசோதனை

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை, மகிழ்விக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம், கர்ப்பிணியாக இருக்கும்போது சாப்பிடும் மருந்துகள், கதிர்வீச்சு, கிருமிதொற்று உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளின் செவிகள் சப்தத்தை உள்வாங்கும் திறனை இழக்கின்றன.இத்தகைய குழந்தைகளின் மூளை

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை, மகிழ்விக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம், கர்ப்பிணியாக இருக்கும்போது சாப்பிடும் மருந்துகள், கதிர்வீச்சு, கிருமிதொற்று உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளின் செவிகள் சப்தத்தை உள்வாங்கும் திறனை இழக்கின்றன.

இத்தகைய குழந்தைகளின் மூளை செயல்பாடு, நன்றாயிருக்குமென்பதால் காதின் உட்புறம் காதொலிக்கருவியை பொருத்தினால் கேட்கும் திறன் கிடைக்கும். இதற்காக, காக்ளியர் இம்ப்ளான்டேஷன் என்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை, 250க்கும் அதிகமான குழந்தைகளுக்கு, இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சர்வதேச காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கு, பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 குழந்தைகளுக்கு டீன் நிர்மலா பரிசு வழங்கினார்.இதை தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் டிரைவர்களுக்கு, செவித்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X