பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய்களில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் மீன்வளர்ப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஏழு நீர்பாசன கண்மாய்களில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் மீன் வளர்ப்பு மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படுகிறது.கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது: மீன் வளர்ப்பு மூலம் சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும், மீன் வளர்ப்போர் கூடுதல் லாபம் பெறவும், மீன் வளர்ப்பு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறவும் முகமை பல்வேறு திட்டங்களை

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஏழு நீர்பாசன கண்மாய்களில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் மீன் வளர்ப்பு மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படுகிறது.கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது:

மீன் வளர்ப்பு மூலம் சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும், மீன் வளர்ப்போர் கூடுதல் லாபம் பெறவும், மீன் வளர்ப்பு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறவும் முகமை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் செயலாக்கத்திலுள்ள ஏழு கண்மாய்களில் மீன் வளர்த்து பயன்பெறும் உரிமையை குத்தகை விட அக்., 4 முதல் 19ம் தேதி மதியம் 2:00 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. அக்., 20 காலை 11:30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி அக்., 4 முதல் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் விவரங்கள் பெற மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், மேலப்பொன்னகரம் 5வ தெரு, ஆரப்பாளையம், மதுரை முகவரியிலுள்ள உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என்றார். போன் 0452-234 7200.நாளை தடுப்பூசி முகாம்கலெக்டர் கூறுகையில், ''நாளை (செப். 26) மாவட்டத்தில் 1200 இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவச முகாம் நடக்கிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாமில் செலுத்தி கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X