பொது செய்தி

தமிழ்நாடு

பூம்புகார் கண்காட்சியில் வரவேற்கிறார்...

Added : செப் 25, 2021
Share
Advertisement
அழகழகாய் வண்ணங்களை கொட்டி, விதவிதமாக செய்யப்பட்ட கொலு பொம்மைகளின் அணிவகுப்பு, கோவை பூம்புகார் விற்பனை மையத்தை அலங்கரித்துள்ளது.தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் என்னும் பூம்புகார் நிறுவனம், தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் உற்பத்தியை, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது. இங்கு, வருடம் முழுவதும் கைவினை பொருட்களை சந்தைப்படுத்தி
 பூம்புகார் கண்காட்சியில் வரவேற்கிறார்...

அழகழகாய் வண்ணங்களை கொட்டி, விதவிதமாக செய்யப்பட்ட கொலு பொம்மைகளின் அணிவகுப்பு, கோவை பூம்புகார் விற்பனை மையத்தை அலங்கரித்துள்ளது.தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் என்னும் பூம்புகார் நிறுவனம், தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் உற்பத்தியை, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது. இங்கு, வருடம் முழுவதும் கைவினை பொருட்களை சந்தைப்படுத்தி வந்தாலும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு போடப்படும், கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு தனி சிறப்பு உண்டு. இந்தாண்டுக்கான கண்காட்சியை காண, நாம் பூம்புகாரில் நுழைந்தவுடன் முதலில் நம் கண்களில் படுகிறது, 'ஸ்காட்லாந்து நாராயணன்' பொம்மை.பெயரை போலவே பார்க்கவும் கண்களை கவரும் வகையில் உள்ளார் நாராயணன். இந்தாண்டு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொங்கல் செட், ஜல்லிக்கட்டு, உழவர் சந்தை, பெண் பார்க்கும் செட், பந்தி செட், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஐந்தினை நிலங்கள் மாடல் உள்ளிட்டவை, தமிழர்களின் வாழ்வியலையும் கலாசாரத்தையும் எடுத்துரைக்கும் வகையில் உள்ளன.இதை தவிர சித்திரகுப்தன், கோகிலாம்பாள், மதுரை மீனாட்சி அம்மன், ராமர் ஆண்டாள் மும்மூர்த்திகள் செட், தோரணம், வெட்டிவேர் விநாயகர், மைசூர் தசரா செட், மரப்பாச்சி தசாவதார செட் போன்றவை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கண்காட்சி சிறப்பாக அமையவில்லை. இந்தாண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தான் கண்காட்சி போடப்பட்டுள்ளது. இந்தாண்டு பலவகையான, புதுமையான பொம்மைகள் வந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்திற்கும்,, 20ம் தேதி வரை தினசரி காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். பொம்மைகள் அனைத்திற்கும் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. - ரொனால்டு செல்வஸ்டின், மேலாளர், பூம்புகார் விற்பனை நிலையம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X