பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ந்து கொண்டே இருக்கிறது இந்த வெண்டைச்செடி!

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை பீளமேடு பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் நீதிபதி ஸ்ரீராமுலு. இவரது வீட்டு தோட்டத்தில் உள்ள ஒரு வெண்டைக்காய் செடி, 10 அடிக்கு மேல் வளர்ந்து, பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.''பொதுவாக வெண்டைக்காய் செடி, மூன்று அடிக்கு மேல் வளர வாய்ப்பில்லை. இது எப்படி இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது'' என, நீதிபதியிடம் கேட்டோம்.''என் நண்பர் ஒருவர் நான்கு விதை கொடுத்தார். அதை
 வளர்ந்து கொண்டே இருக்கிறது இந்த வெண்டைச்செடி!

கோவை பீளமேடு பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் நீதிபதி ஸ்ரீராமுலு. இவரது வீட்டு தோட்டத்தில் உள்ள ஒரு வெண்டைக்காய் செடி, 10 அடிக்கு மேல் வளர்ந்து, பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.''பொதுவாக வெண்டைக்காய் செடி, மூன்று அடிக்கு மேல் வளர வாய்ப்பில்லை. இது எப்படி இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது'' என, நீதிபதியிடம் கேட்டோம்.''என் நண்பர் ஒருவர் நான்கு விதை கொடுத்தார்.
அதை தோட்டத்தில் பதியம் போட்டேன். மூன்று விதைகள் முளைக்கவில்லை. இந்த ஒரு விதைதான் முளைத்தது. ஒரே மாதத்தில் இடுப்பு உயரம் வளர்ந்து விட்டது. வீட்டில் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். இதற்கு மேல் வளராது என, நினைத்தோம். ஆனால் அது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மூன்று மாதத்தில், 10 அடி உயரத்தை தாண்டி விட்டது. காய்கள் கொத்தாக காய்ப்பதில்லை; தனித்தனியாக காய்க்கிறது. வாரம் மூன்று அல்லது நான்கு காய்கள் காய்க்கின்றன. வீட்டில் எல்லோருக்கும் இந்த செடிதான் செல்லம்,'' என்றார்.

இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலைக்கல்லுாரி டீன் புகழேந்தி கூறியதாவது:இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஹைபிரிட் வெண்டைச்செடி. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பந்தரா பகுதியில் வசிப்பவர்கள், இந்த செடியை வீட்டில் அழகுக்காக விரும்பி வளர்க்கின்றனர். இது அதிக உயரம் வளரும். அதிகம் கிளைகள் விரிக்காது. நம் விவசாயிகள் தோட்டத்தில் போடும் வெண்டை, அதிக உயரம் வளராது.ஆனால் காய்கள் கொத்துக்கொத்தாக காய்க்கும். இந்த காய்கள் அதிக வழுவழுப்பு தன்மையுடன் இருப்பதால், நோய் எதிப்பு சக்தி அதிகம். மலச்சிக்கல் மற்றும் வயிற்று புண் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X