பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க., விற்கு சொல்லித் தர வேண்டுமா?

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எம்.கோபாலன், ஆழ்வார் திருநகரி, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் துவக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு நகைக் கடன் மோசடி நடந்துள்ளதாம். அதாவது, நகைக் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., அரசின் அறிவிப்பை, அந்த வங்கி
இது, உங்கள் இடம், தி.மு.க.,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



எம்.கோபாலன், ஆழ்வார் திருநகரி, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் துவக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு நகைக் கடன் மோசடி நடந்துள்ளதாம். அதாவது, நகைக் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., அரசின் அறிவிப்பை, அந்த வங்கி நிர்வாகத்தினர் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே பெற்றிருந்த ஆவணங்களின்படி, பல நபர்களுக்கு நகைக் கடன் கொடுத்ததாக போலி ஆவணங்களை தயார் செய்து, பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

தி.மு.க., அரசியல் கட்சியாக இருந்தவரை வெறும் பொதுக் கூட்டம், நாடகம், மாநாடு, ஊர்வலம் என்ற அளவிலேயே இயங்கியது.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என கொள்கை வகுக்கப்பட்டதும், பணம் எப்படி குவிக்கலாம் என, அக்கட்சி சிந்திக்க துவங்கியது.அதில் ஒன்று தான், கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்து, 'ஆட்டையை' போடுவது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உடன், ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் தி.மு.க.,வினர் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளப்பட்டனர். கூட்டுறவு சங்கங்கள், ஒட்டகம் தலையை நுழைத்த கூடாரம் மாதிரி ஆனது.

அதுவரையில் அந்த சங்கத்தை முறையாக நிர்வகித்து வந்த இயக்குனர்களை, சாம, தான, பேத, தண்ட முறைகளை உபயோகித்து விரட்டியடித்தது.அதாவது, 'கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற கொள்கையோடு இயங்கி கொண்டிருந்த கூட்டுறவு சங்கங்களை, 'கூட்டுறவே வீட்டுயர்வு' என கொள்ளையடிக்க துவங்கியது.அதுவரையில் லாபத்தில் இயங்கிய கூட்டுறவு சங்கங்கள், தி.மு.க., நுழைந்த பின் நஷ்டத்தில் தள்ளாட துவங்கின.அப்படி நஷ்டத்தில் சங்கத்தை இழுத்து மூடும் நிலை வரும் போது, அரசு நிதியுதவி செய்வது வாடிக்கையாக இருந்தது.சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட முடியும். கூட்டுறவு சங்கம் இயங்கினால் தானே, இயக்குனர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை வசதியையும் பெருக்கி கொள்ள முடியும்.


latest tamil news


தி.மு.க., ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை, எந்த கூட்டுறவு சங்கத்திற்காவது அரசு நிதியுதவி செய்திருக்கிறதா? சங்க உறுப்பினர்கள் வாங்கியிருந்த கடன்களை ரத்து செய்திருக்கிறதா?அத்தனையும், தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின் தான் நடைபெற ஆரம்பித்தன.குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி போல, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகளிலும் முறைகேடுகள் நிச்சயம் நடந்திருக்கும். அந்த மோசடி 200 கோடி ரூபாய்களையும் தாண்டி மிரள வைக்கும்.கிடங்கில் இருப்பு வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை, எறும்பு தின்று தீர்த்ததாகவும்; அந்த சாக்குப்பைகளை கரையான் அரித்து கபளீகரம் செய்து விட்டதாகவும் கதையளந்த கட்சியான தி.மு.க.,விற்கு மோசடி செய்வது குறித்து சொல்லியா தர வேண்டும்!

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
25-செப்-202122:49:01 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்தியாவிலே முதல் முறையாக அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரான கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவியை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
25-செப்-202120:17:05 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஊழல் செய்ய டீம்காவுக்கு பாடம் சொல்லித்தரும் அவசியமில்லை மற்ற கட்சிகள் தான் டீம்காவிடம் கற்கவேண்டிய நிலையில் உள்ளன
Rate this:
Cancel
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
25-செப்-202119:41:47 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்து முதன் முறையாக முதலமைச்சர் ஆனதை கூட வெற்றி விழாவாக கொண்டாதது, சட்டமன்றத்தில் தனது புகழ் பாட கூடாது என்று தன் கட்சி உறுப்பினர்களுக்கு தடை போட்டது, பதாகைகள் வைக்க கூடாது என்று தன் கட்சியினருக்கு உத்தரவு, கல்வித்துறையில் முன்னாள் முதல்வர்களின் படம் போட்டிருந்ததை நீக்காமல் அப்படியே வழங்க சொல்லி அரசு நிதியை மிச்சப்படுத்தியது, அரசு விருதுகளில் முதல்வர் படம் போடாதது, பாதுகாப்புக்காக பெண் காவல்துறையினர் நீண்ட நேரம் சாலைகளில் நிறுத்தப்பட கூடாது என்ற உத்தரவு என்ற இவைபோன்ற இன்னும் எத்தனையோ சொல்லாத செயல்களையும் சாதித்து காட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது ஆட்சி சிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X