பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்காரருக்கு காரு...குடியிருக்க புது வீடு! பைனான்ஸ் நிறுவன பணத்தில் பெண் 'சடுகுடு'

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை;பைனான்ஸ் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை - சத்தி ரோடு சரவணம்பட்டியை சேர்ந்தவர் சரவணசெல்வன், 39. அதே பகுதியில் கமலம் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். பழைய பைக்குகளுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.நிறுவனத்தில் கொண்டயம்பாளையத்தை சேர்ந்த கவிதா, 45 என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலாளராக

கோவை;பைனான்ஸ் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை - சத்தி ரோடு சரவணம்பட்டியை சேர்ந்தவர் சரவணசெல்வன், 39. அதே பகுதியில் கமலம் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். பழைய பைக்குகளுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.நிறுவனத்தில் கொண்டயம்பாளையத்தை சேர்ந்த கவிதா, 45 என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்தார்.

இந்நிறுவனத்தில் ஏற்கனவே நிதி பெற்று முறையாக செலுத்தியவர்களுக்கு, மீண்டும் ஆவணங்கள் எதுவுமின்றி நிதி கொடுப்பது வழக்கம்.இதைப் பயன்படுத்தி உரிமையாளருக்கு தெரியாமல் கவிதா, ஏற்கனவே நிதி பெற்று திருப்பி செலுத்தியவர்களின் பெயரில், மீண்டும் பைனான்ஸ் போடுவதாக கூறி ரூ.11.49 லட்சம்மோசடி செய்துள்ளார்.
நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்தபோது கடந்த ஓராண்டில், 72 வாடிக்கையாளர்களின் பேரில், ரூ.11.49 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்து, சரவணசெல்வன் சரவணம்பட்டி போலீசாரிடம், புகார் அளித்தார்.வழக்குப்பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், நிறுவனத்தில் இருந்து பணத்தை கையாடல் செய்த கவிதா, அதன் மூலம் கணவருக்கு கார் வாங்கி கொடுத்திருப்பதும், புதிய வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்து இருப்பதும் தெரிந்தது. தலைமறைவாக உள்ள கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X