மதுரை : ''வணிக வரி ஏய்ப்பை கண்டறிய 7 நாட்களாக சோதனை தொடருகிறது. தொடர்ந்து கண்காணிக்கிறோம். வரி ஏய்ப்பு, மறைக்கப்பட்ட தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்'' என மதுரை கடச்சனேந்தலில் நடந்த சமூக வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நேற்று முன் தினம் கம்பி ஏற்றி சென்ற லாரியை வணிக வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்த போது ரூ.15 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல கண்டெய்னரில் சிமென்ட் ஏற்றிக் கொண்டு சென்றதை விசாரித்த போது குடோனிலிருந்து ஏற்றிச்செல்வதாக தெரிவித்தனர். ஆனால் முறையான ரசீது இல்லை. இப்படி வணிக வரி ஏய்ப்பு செய்வதை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
பத்தாண்டுகளாக பதிவு செய்யாத சங்கங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அவர்களது ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலர்கள் ஆராய்ந்து முறையான கணக்குகள் தாக்கல் செய்திருந்தால் அபராதம் விதித்து சங்க பதிவு புதுப்பிக்கப்படும். அதில் தவறு நடந்திருந்தால் பதிவு ரத்து செய்யப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில் மதுரையில் தமிழன்னை சிலை வைக்கப்படும், மோனோ ரயில் விடப்படும் என்றனர். செய்தார்களா. ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். தற்போது எந்த தேர்தலும் இல்லை. எனவே தேர்தலுக்காக தி.முக., எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றார்.கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், வெங்கடேசன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, மாவட்ட ஊராட்சி தலைவர் சூர்யகலா, மேற்கு ஒன்றிய தலைவர் வீரராகவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE