காணாமல் போன ஆண் கிணற்றில் சடலமாக மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன ஆண் கிணற்றில் சடலமாக மீட்பு

Added : செப் 25, 2021
Share
தொண்டாமுத்தூர்:பூலுவப்பட்டி, சிறுவாணி ரோட்டில் உள்ள கிணற்றில், சடலம் கிடப்பதாக, ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில், உயிரிழந்தது பூலுவப்பட்டி,

தொண்டாமுத்தூர்:பூலுவப்பட்டி, சிறுவாணி ரோட்டில் உள்ள கிணற்றில், சடலம் கிடப்பதாக, ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில், உயிரிழந்தது பூலுவப்பட்டி, சித்திரைச்சாவடி பகுதியை சேர்ந்த கணேசன், 47 என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த மாதம், 18ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மறுபடியும் திரும்பவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக வீடு திரும்பாததால், கணேசனின் அண்ணன் கனகராஜ், ஆலாந்துறை போலீசில், தம்பியை காணவில்லை என, நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X