மொபைல்போன் திருட்டு: இளம்பெண்ணுக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் திருட்டு: இளம்பெண்ணுக்கு சிறை

Added : செப் 25, 2021
Share
கோவை;தனியார் நிறுவன ஊழியரிடம் மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, போத்தனுார் நாடார் காலனியை சேர்ந்தவர் தம்பிராஜ் மகள், மோகனபிரியா, 29; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இவர் ஒப்பணக்கார வீதியில், பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண், மோகனபிரியாவின் கைப்பையை திறந்து

கோவை;தனியார் நிறுவன ஊழியரிடம் மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, போத்தனுார் நாடார் காலனியை சேர்ந்தவர் தம்பிராஜ் மகள், மோகனபிரியா, 29; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இவர் ஒப்பணக்கார வீதியில், பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண், மோகனபிரியாவின் கைப்பையை திறந்து ரூ.5,000 மதிப்பிலான மொபைல்போனை திருடி தப்ப முயன்றார். மோகனபிரியா சத்தமிட, அருகிலிருந்தவர்கள் பிடித்து, பெரிய கடைவீதி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இளம்பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த லட்சுமி, 25, எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X