எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலிமறைந்த சினிமா பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியத்துக்கு, கோவை இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில், இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலை, 10:30 மணிக்கு, ஆர்.எஸ்.புரம் கென்னடி தியேட்டர் அருகில் உள்ள, சங்க அலுவலகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, எஸ்.பி.பி.,யின் பாடல்களை பாடி, அஞ்சலி செலுத்துகின்றனர். இசைப்பிரியர்கள் பங்கேற்கலாம்.கவிதை நுால் அறிமுகம்கோவை இலக்கிய சந்திப்பு அமைப்பு சார்பில், புதிய நுால் அறிமுக நிகழ்ச்சி நடக்கிறது.இன்று மாலை, 6:00 மணிக்கு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிளேசியர் பார்க் ஒட்டல் அரங்கில், 'அலைகளின் வெள்ளைப்பாட்டு' என்ற கவிதை நுால் அறிமுகம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்கு, கவிஞர் அவைநாயகன் தலைமை வகிக்கிறார்.கவிதை நுால் குறித்து, கவிஞர் பொன் இளவேனில், எழுத்தாளர் இளஞ்சேரல் அகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.'புதிய வெண்பாக்கள் ஆக்கம்' என்ற தலைப்பில் கவிஞர் மீனாட்சிசுந்தரம், 'கவிதையில் மரபின் வலிமை' என்ற தலைப்பில், கவிஞர் கவியன்பன் பாபு ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE