பொது செய்தி

தமிழ்நாடு

பனி விழும் 'எஸ்.பி.பி.,வனம்' :மறக்க முடியாமல் தவிக்குதே மனம்!

Added : செப் 25, 2021
Share
Advertisement
பேரூர் செட்டிபாளையத்தில் உருவாக்கப்பட்ட, 'எஸ்.பி.பி., வனத்தில்' நடப்பட்ட மரக்கன்றுகள் நன்கு செழித்து வளர்ந்து வருகின்றன.பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 2020, செப்., 25ல் காலமானார். அவரது நினைவாக, 'சிறுதுளி' அமைப்பினர், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆபீசர்ஸ் காலனியில், 1.8 ஏக்கரில் 'எஸ்.பி.பி., வனம்' உருவாக்கினர்.இசை கருவிகள் தயாரிக்க பயன்படும் வேம்பு, தேக்கு,
 பனி விழும் 'எஸ்.பி.பி.,வனம்' :மறக்க முடியாமல் தவிக்குதே மனம்!

பேரூர் செட்டிபாளையத்தில் உருவாக்கப்பட்ட, 'எஸ்.பி.பி., வனத்தில்' நடப்பட்ட மரக்கன்றுகள் நன்கு செழித்து வளர்ந்து வருகின்றன.பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 2020, செப்., 25ல் காலமானார். அவரது நினைவாக, 'சிறுதுளி' அமைப்பினர், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆபீசர்ஸ் காலனியில், 1.8 ஏக்கரில் 'எஸ்.பி.பி., வனம்' உருவாக்கினர்.இசை கருவிகள் தயாரிக்க பயன்படும் வேம்பு, தேக்கு, பலா, சந்தனம், ரோஸ்வுட், சில்வர்ஓக் உள்ளிட்ட மரக்கன்றுகளை, அவரது வயதை குறிக்கும் வகையில், 74 வகைகளில் தேர்வு செய்து, இசை குறியீடு வடிவில் நட்டனர். மற்ற இடங்களில், 'மியாவாக்கி' முறையில், 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டது.'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், ''மறைந்த பாடகர் எஸ்.பி.பி., நினைவாக உருவாக்கியுள்ள வனத்தில், நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் நன்கு செழித்து வளர்கின்றன. அவற்றின் வளர்ச்சி சீராக இருக்கிறது. ஆபீசர்ஸ் காலனி பொதுமக்கள் மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் இணைந்து, அந்த வனத்தை பராமரிக்கின்றனர். அவரது நினைவாக நாளை (இன்று) ஒரு வீடியோ வெளியிடுகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X